தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று 

Published By: Vishnu

04 Aug, 2019 | 08:25 AM
image

2019 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை நாடளாவிய ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். 

இதன்படி குறித்த பரீட்சைக்கு சிங்கள மொழி மூலமாக 2 இலட்சத்து 55,529 மாணவர்களும், தமிழ் மொழி மூலமாக 83 ஆயிரத்து 840 மாணவர்களும் தோற்றவுள்ளனர். 

இதற்காக 2,995 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

காலை 9.30 மணியளவில் பரீட்சை ஆரம்பமாகவுள்ளதால் 9 மணியளவில் பரீட்சாத்திகள் அனைவரும் பரீட்டை மண்டபத்திற்கு வருகை தர வேண்டும் என்று பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார். 

இதேவேளை நாளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. இம்மாதம் 31 அம் திகதி வரை இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.  

இம்முறை நாடளாவிய ரீதியில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். இவர்களில் புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாக 198,229 மாணவர்களும், பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாக 139,475 மாணவர்களும் தோற்றவுள்ளனர். இதற்காக நாடளாவிய ரீதியில் 2678 பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:05:57
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38