ஜனா­தி­பதி, பிர­தமர் கன­வுகள் கலைந்­துள்ள நிலையில் சம்பந்­தனின் எதிர்க்­கட்சி ஆச­னத்­தை­யேனும் பறிக்கும் நோக்­கத்­தி­லேயே மஹிந்த அணி­யினர் செயற்­பட்டு வரு­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் குழப்­பங்­களை மேற்­கொள்­ளவும், பயங்­க­ர­வாத கதை­களை பரப்­பவும் இதுவே காரணம் என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்தார்.

எம்­மீது பொய்க்­குற்றம் சுமத்தி எதி­ரணி பலத்­தினை குறைக்க முயற்­சிக்­கின்­றனர். ஆனால் நாம் இருக்கும் வரையில் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்க்­கட்சி பத­விக்­காக தொடர்ச்­சி­யாக மஹிந்த அணி­யினர் போரா­டி­வரும் நிலை­யிலும், மக்கள் விடு­தலை முன்­னணி மீது சுமத்­தி­வரும்

குற்­றச்­சாட்­டு­களின் பின்­னணி தொடர்­பிலும் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போது தனது ஜனா­தி­பதி பத­வியை தக்­க­வைக்க பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மஹிந்த ராஜபக் ஷ மேற்­கொண்டார். அவ­ருடன் இருக்கும் அணி­யினர் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் அனைத்தும் எம்மால் அவ­தா­னிக்­கக்­கூ­டி­ய­தாக இருந்­தன. எனினும் ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது அவ­ரது சர்­வா­தி­கார ஜனா­தி­பதி பத­வியை தக்­க­வைக்க முடி­யாது போய்­விட்­டது. அதேபோல் அடுத்த பொதுத் தேர்­த­லின்­போதும் தன்னை பிர­த­ம­ராக்­கிக்­கொள்ள வேண்டும் என அவர் முயற்­சித்தார். சகல அர­சியல் மேடை­க­ளிலும் தன்னை பிர­த­ம­ராகக் வேண்டும் என்ற வகையில் கருத்­துக்­களை முன்­வைத்தார். ஆனால் பொதுத் தேர்­த­லின்­போதும் அவரால் பிர­த­மாக முடி­யாது போய்­விட்­டது. தான் மீண்டும் அதி­கா­ரத்­துக்கு வர­வேண்டும் என்ற கனவு நன­வா­க­வில்லை.

எனவே தான் அவ­ரது அணி­யி­னரை வைத்து இப்­போது எதிர்க்­கட்சி பத­வி­யை­யேனும் கைப்­பற்ற வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் செயற்­பட்டு வரு­கின்றார். சம்­பந்­தனின் எதிர்க்­கட்சி நாற்­கா­லியை கைப்­பற்றும் தீவிர முயற்­சியை இவர்கள் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அதற்­கா­கவே பொது எதி­ர­ணி­யினர் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்தி பாரா­ளு­மன்­றத்தில் தனித்து செயற்­ப­டவும் முயற்­சிக்­கின்­றனர். எனினும் அவர்­க­ளது செயற்­பா­டு­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் மக்கள் விடு­தலை முன்­னணி தடை­யாக இருப்­பதன் கார­ணத்­தினால் தான் எம்­மீதும் பொய்­யான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து குழப்­பத்தை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றனர். அதேபோல் வடக்கில் பாது­காப்பு அச்­சு­றுத்தல் உள்­ளது எனவும் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் பிரிவினைவாதத்தை உருவாக்குவதாக கூறியும் தமது காரியத்தை சாதிக்க முயற்சிக்கின்றனர். எவ்வாறு இருப்பினும் இவர்களின் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என்றார்.