‘துக்ளக் தர்பார்’

Published By: Daya

03 Aug, 2019 | 04:53 PM
image

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ படத்தின் படபிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பமானது.

தயாரிப்பாளர்  லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்  மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான புதிய படம் ‘துக்ளக் தர்பார்’.. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதிதிராவ் ஹதாரி நாயகியாக நடிக்கிறார்.. இயக்குநரும் நடிகருமான ரா.பார்த்திபன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதை திரைக்கதை அமைத்து இப்படத்தை புதுமுக இயக்குநர் டில்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்’ சீதக்காதி பட இயக்குனர் பாலாஜி தரணிதரன் வசனங்களை எழுத,  96 படத்தின் இயக்குநரான பிரேம்குமார். ஒளிப்பதிவுசெய்கிறார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தை எடிட்டர் கோவிந்தராஜ் தொகுக்கிறார்.  

இன்று நடைபெற்ற இந்த பூஜையில் விஜய்சேதுபதி, அதிதிராவ் ஹெய்தாரி, பார்த்திபன், காயத்ரி, சமுத்திரக்கனி, பகவதி பெருமாள், கருணாகரன், ராஜ்குமார், தயாரிப்பாளர்கள் வயகாம் அனுப், விஜய்சேதுபதி புரொடக்சன் ராஜேஷ், சினிமாவாலா  சதிஷ் மற்றும் இயக்குநர்கள் பிரேம்குமார், பாலாஜி தரணிதரன், தியாகராஜ குமாரராஜா, அஜய் ஞானமுத்து, பிரபாகரன், மருதுபாண்டி, ஆண்ட்ரு ஆகியோர் பங்குபற்றினர். 

சுப்பர் ஸ்டாரின் ‘தர்பார்’ தயாராகி பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் நிலையில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதியின் நடிப்பில் தற்போது ‘ துக்ளக் தர்பார்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகுவது அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக்குரிய தாக்கியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35