விமானத்தில் இருந்து குதித்து மாணவி பலி

Published By: Daya

03 Aug, 2019 | 11:34 AM
image

விமானத்தில் இருந்து குதித்து உயிரிழந்த மாணவியின் உடலை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இங்கிலாந்து - லண்டனை சேர்ந்தவர் அலானா கட்லாண்ட் (வயது 19). இவர் அங்குள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் அலானா கட்லாண்ட், தொழில்முறை பயிற்சிக்காக ஆபிரிக்கா - மடகாஸ்கருக்கு சென்றார். அங்கு வடமேற்கு பகுதியில் உள்ள கடற்கரை நகரமான அஞ்சாஜாவியில் தங்கியிருந்து அவர் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வந்தார்.

கடந்த மாதம் 25 ஆம் திகதி உயிரினங்கள் குறித்த ஆய்வுக்காக நாட்டின் வடக்கு பகுதிக்கு சென்றார். பின்னர் ஆய்வுகளை முடித்துக்கொண்டு சிறிய ரக பயணிகள் விமானத்தில் அஞ்சாஜாவிக்கு புறப்பட்டார்.

விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டு இருந்தபோது தனது இருக்கையில் இருந்து எழுந்து சென்ற அலானா கட்லாண்ட் திடீரென விமானத்தின் கதவை திறந்தார். இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் உருவானது.

அலானா கட்லாண்ட் விமானத்தில் இருந்து கீழே குதிக்க முயன்றார். உடனடியாக அருகில் இருந்த பயணி ஒருவர் அவரது காலை கெட்டியாக பிடித்துக்கொண்டு விமானத்தின் கதவை மூட முயன்றார்.

ஆனால் அதையும் மீறி அலானா கட்லாண்ட் விமானத்தில் இருந்து குதித்தார். அவரது உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அலானா கட்லாண்ட் எதற்காக விமானத்தில் இருந்து குதித்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து மடகாஸ்கர்  பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17