சூரியன், புதன் மற்றும் பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் அபூர்வ நிகழ்வு தற்போது இடம்பெற்ற கொண்டிருக்கின்து.

 விண்வெளியில் இதுபோன்ற புதன் இடைமறிப்பு நிகழ்ச்சி கடந்த 2006ஆம் ஆண்டு நடந்தது. இனி 2019 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இதுபோன்ற நிகழ்வு நடக்கவுள்ளது. 

பூமி, புதன் சூரியன் ஆகியவை 11 நாட்களுக்கு ஒரு முறை நேர்க்கோட்டில் சந்தித்தாலும், கோள் மறைவு ஏற்படுவதில்லை. பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து, புதன் ஏழு டிகிரி கோண சாய்வாக உள்ளது. 

புதனின் பாதை, பூமி வலம் வரும் தளத்தினை, இரண்டு புள்ளிகளில்தான் வெட்டும். அந்த புள்ளிகளில் ஏதேனும் ஒன்றில் அவை நேர்கோட்டில் சந்தித்தால் மாத்திரமே புதன் இடைமறிப்பு ஏற்படும். 

இந்த நிகழ்வு இன்று மாலை 4.40 மணி முதல் 6.30 மணி வரை பார்க்கலாம். இந்த காட்சியை நேரடியாக வெறும் கண்ணால் பார்க்க கூடாது.