டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை திடீர் அதிகரிப்பு

Published By: Digital Desk 3

02 Aug, 2019 | 05:06 PM
image

(நா.தினுஷா)

டெங்கு நோயினால் கடந்த ஏழு மாதங்களில் 34 078 பேர் பாதிப்படைந்துள்ளதாகவும் கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 7 815 நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு நோய் தடுப்பு பிரிவு  அறிவித்துள்ளது. சுமார்  44  சதவீதமான டெங்கு நோயளர்கள்  மேல் மாகாணத்திலேயே இணங்காணப்பட்டுள்ளதாக  அறிக்கையிட்டிருக்கிறது.

கடந்த ஜெனவரி மாதத்தில்  5 580 ஆக காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை  பெப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் முறையே 3736, 3832, 2970 ஆக காணப்பட்டது. 

மே மாத்தின் பின்னர் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட நோயளர்களின்  எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.  மே மாதத்தில்  4239 அக காணப்பட்ட  டெங்கு  நோயளர்களின்  எண்ணிக்கை கடந்த இரண்டு மாதங்களில், ஜூனில்  5906 நோயாளர்களும் ஜூலையில் 7815 நோயளர்களும்  அடையாளங் காணப்பட்டுள்ளனர். காலநிலையில்  ஏற்பட்ட  மாற்றமே டெங்கு நோயாளர்களின்  எண்ணிக்கை அதிகரிப்பதற்கு  காணமாக அமைந்துள்ளதாகவும்  டெங்கு  நோய் தடுப்பு பிரிவ தெரிவிக்கிறது.  

கடந்த ஏழு மாதங்களில்  மேல்மாகாணத்தில் மாத்திரம்  7260 டெங்கு  நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளனர். ஜூலை மாத இறுதியில்  மேல் மாகாணத்தில்  1857 நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை , இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில்  டெங்கு நோயின் பரவல் அதிகரித்திரப்பதாகவும் நோய் தடுப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41