உத்தேச கூட்டமைப்பு யாப்பு தொடர்பான திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை பிரதமருக்கு அனுப்பிய அஜித் பீ. பெரேரா

Published By: Daya

02 Aug, 2019 | 05:18 PM
image

(எம்.மனோசித்ரா)

உத்தேச கூட்டமைப்பு யாப்பு தொடர்பான திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ. பெரேரா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

உத்தேச கூட்டணி யாப்பு திருத்தம் செயற்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்படும் வரை கூட்டணியை உருவாக்குவதற்கான உடன்படிக்கையில் கைசாத்திடக் கூடாது என அமைச்சர் அஜித் பீ. பெரேரா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

வியாழக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின்போது உத்தேச கூட்டமைப்பு யாப்பிற்கு பெரும்பாலான உறுப்பினர்களால் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தேச கூட்டமைப்பு யாப்பு தொடர்பான திருத்தங்கள் அடங்கிய கடிதத்தை அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பீ. பெரேரா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ளார். 

இந்த கடிதத்தில் பிரதானமாக 8 விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஜனநாயக தேசிய முன்னணியின் செயலாளர் ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவராக இருக்க வேண்டும் என்பது கட்டாயமானதாகும் என்பதே அந்த பரிந்துரைகளில் முதலாவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயமாகும்.

உத்தேச தேசிய ஜனநாயக முன்னணி யாப்பு தொடர்பில் வியாழக்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் தவிசாளர்களான காமினி ஜயவிக்கிரம பெரேரா மற்றும் மலிக் சமரவிக்கிரம, தவிசாளர் கபிர் ஹாசீம் உள்ளிட்டோர் அவற்றில் பல யோசனைகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவித்திருந்தார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10