அண்மைய வருடங்களில் இலங்கையுடனான நட்புறவு  விரும்பத்தக்க வகையில் அமைந்துள்ளது -ஐரோப்பிய ஒன்றியம் 

Published By: R. Kalaichelvan

02 Aug, 2019 | 03:13 PM
image

(நா.தனுஜா)

அண்மைய சில வருடகாலமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டுவரும் விரும்பத்தக்க நட்புறவு மற்றும் ஜீ.எஸ.பி பிளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தி இருதரப்பு வர்த்தக வாய்ப்புக்களை விரிவுபடுத்தல் என்பன குறித்து இருதரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள கிரேஸ் ஆசீர்வாதம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டதன் பின்னர் ஆசிய  - பசுபிக் பிராந்தியத்திற்கான ஐரோப்பிய வெளியகத் திட்டத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கன்னர் வியகென்டை சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது கடந்த சில வருடங்களாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டுவரும் விரும்பத்தக்க நட்புறவு குறித்து சுட்டிக்காட்டிய வியகென்ட், அது மேலும் தொடர்வதுடன், வலுப்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

அத்தோடு தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் வழங்கிவரும் ஒத்துழைப்பு தொடர்பிலும் உயிர்த்த ஞாயிறுதின பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து இலங்கைக்கு வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பிலும் வியகென்ட் வலியுறுத்தியதுடன், ஜீ.எஸ.பி பிளஸ் வரிச்சலுகையை பயன்படுத்தி இருதரப்பு வர்த்தக வாய்ப்புக்களை விரிவுபடுத்துவது பற்றியும் குறிப்பிட்டார்.

மேலும் பல்தரப்பு விவகாரங்கள் மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு தொடர்பிலும் கிரேஸ் ஆசீர்வாதம், கன்னர் வியகென்ட் ஆகியோர் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38