தோட்டத் தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் குறித்த மஹிந்தவின் அதிரடி கருத்து

Published By: J.G.Stephan

02 Aug, 2019 | 12:57 PM
image

(ஆர்.யசி)

தோட்டத்தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளையும் தனியார் துறையினருக்கான சம்பளத்தையும் உயர்த்த அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும். தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அவர்களை கவனத்தில் கொள்ளாத தலைமைகள் இன்று அரசாங்கத்தில் உள்ளன என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் நேற்று சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நிலையியல்கட்டளை 27/2 இ  கீழ் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இந்த காரணிகளை முன்வைத்தார். 

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பளம் 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் பகுதி அளவிலான அரச நிறுவனங்களுக்கு இன்றுவரை சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. 

இதனை பக்கசார்பான செயற்பாடு என்றே கருதுகின்றோம். ஏன் அவர்களின் சம்பள உயர்வை முன்னெடுக்கவில்லை என அரசாங்கம் சபையில் தெளிவுபடுத்த வேண்டும். தனியார் துறைக்கு சம்பள உயர்வுகளை ஏற்படுத்த  எமது அரசாங்கத்தில் பேச்சுவார்த்தை நடத்தி நாம் தனியார் துறையின் சம்பளத்தை உயர்த்தினோம். 

இந்த அரசாங்கம் தனியார் துறையின் சம்பள விடயங்களில் எந்த தலையீடும் செய்யாமல் இருக்கின்றமை  பாரதூரமான விடயமாகும். தனியார் துறையினருக்கான சம்பளத்தை உயர்த்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

 நான்கரை ஆண்டுகளாக அரசாங்கம் தோட்டத்தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது. அடிப்படை சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக உயர்த்துவதாக கூறிய இந்த அரசாங்கம் இறுதிவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. எனினும் இந்த அரசாங்கம் ஆட்சியை கைப்பற்ற தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளை தன்வசப்படுத்திய போதும் கூட அவர்களுக்கான எந்த நன்மைகளையும் செய்யவில்லை. 

இந்த அரசாங்கத்தில் தோட்டத்தொழிலாளர்களின் தலைமைகள் அங்கம் வகித்து வருகின்றனர் என்பதும் கவலைக்கிடமான விடயமாகவே உள்ளது. எந்தவித அக்கறையும் இல்லாது இந்த மலையக தலைமைகள் இந்த அரசாங்கத்தை காப்பாற்ற மட்டுமே நடவடிக்கை எடுக்கறது வருகின்றன. ஆகவே தனியார் மற்றும் தோட்டத்தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்த உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்துகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51