சஹ்­ரானை நாம் நெருங்­கினோம் சூட்­சு­ம­மாக தப்­பித்­துக்­கொண்டார் ; தெரி­வுக்­குழு முன் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் பதில் பணிப்­பாளர் சாட்­சியம் 

Published By: R. Kalaichelvan

02 Aug, 2019 | 11:57 AM
image

(ஆர்.யசி)

சஹ்ரான் குறித்து பல இடங்­களில் தேடி அவரை நெருங்­கினோம். ஆனால் அவர் சூட்சு­ம­மாக எம்­மிடம் இருந்து தப்­பித்­துக்­கொண்டார் என  உயிர்த்த ஞாயிறு  தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு முன்­னி­லையில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின்  பதில் பணிப்­பாளர் ஜகத் விசாந்த  நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

பாரா­ளு­மன்ற கட்­டட தொகு­தியில் நேற்று நடை­பெற்ற  அமர்­வி­லேயே அவர் இவ்­வாறு சாட்­சி­ய­ம­ளித்தார். அவர் மேலும்  சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

கேள்வி :- உங்­களின் பதவி என்ன ?

பதில் :- எஸ்.எஸ்.பி 

கேள்வி:- ரி.ஐ.ரி யினால் முஸ்லிம் அடிப்­ப­டை­வாதம் குறித்து முதலில் எப்­போது விசா­ர­ணை­களை ஆரம்­பிக்­கப்­பட்­டது?

பதில் :- 2017 ஆம் ஆண்டு.  இதில் சிங்­கள பெளத்த, முஸ்லிம் மற்றும் விடு­த­லைப்­பு­லிகள் குறித்து ஆரா­யப்­பட ஆரம்­பிக்­கப்­பட்­டது. நாலக சில்வா  மூல­மாக இதில் பிரி­வொன்று உரு­வாக்­கப்­பட்­டது. பங்­க­ளாதேஷ் நாட்டில் ஹோட்டல் ஒன்றில் குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்­றது. இதனை அடுத்து நாமும் கவனம் செலுத்தி இவை குறித்து ஆராய ஆரம்­பித்தோம். 

கேள்வி :- நீங்கள் செய்த விசா­ரணை பிரிவு எப்­போது உரு­வா­கி­யது? அதில் என்.டி.ஜே அமைப்பை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க முயற்­சிகள் எடுக்­கப்­பட்­டதா? 

பதில் :- ஆம், ஐ.எஸ் கொள்­கைகள் இலங்­கையில்  இருந்த கொள்­கைகள் என்ன என்­பது குறித்­தெல்லாம் ஆராய்வோம். பொலிஸ்மா அதி­ப­ருக்கு தெரி­விப்போம். 

கேள்வி :- என்ன தொழில்­நுட்ப வச­தி­களை பெற்­றுக்­கொண்­டீர்கள் ?

பதில் :- கணி­னிகள் மற்றும் டொங்கல்  போன்­ற­வற்றை பெற்­றுக்­கொண்டோம். 

கேள்வி:- ஏன் இங்கு அவ்­வா­றான ஒரு அமைப்பை உரு­வாக்க வேண்டும் என நினைத்­தீர்கள் ? 

பதில் :- பங்­க­ளாதேஷ் நகரில் ஒரு குண்­டுத்­தாக்­குதல் இடம்­பெற்­றது. அதன் பின்னர் எமக்கும் இவ்­வா­றான நிலை­மைகள் உரு­வா­கலாம் என்ற நோக்­கத்தில் அவற்றை தடுக்க இவ்­வாறு தயா­ரானோம்.   பங்­க­ளாதேஷ் போன்று இலங்­கையில் தாக்­குதல் நடத்­தினால் என்ன நட­வ­டிக்கை எடுப்­பீர்கள். தடுக்க என்ன நட­வ­டிக்கை எடுப்­பீர்கள்  என ஜப்பான் அதி­காரி ஒருவர் கேட்டார். 

இந்த கேள்­வியை நான் நாலக சில்­வா­விடம் கொண்டு சென்றேன். பின்னர் இது குறித்து ஆராய்ந்தோம். பின்னர் இதனை தடுக்க  என்ன செய்ய வேண்டும், உங்­க­ளுக்கு என்ன உத­விகள் வேண்டும் என்ற கோரிக்­கை­களை கேட்­டனர். அதன்­போது வாக­னங்கள், கம­ராக்கள், மென்­பொருள் உள்­ளிட்ட பல விட­யங்­களை நாம் கூறினோம். அதற்­க­மைய தான் கண்­கா­ணிப்பு வாகனம் ஒன்றும் வழங்­கப்­பட்­டது. ஜப்பான் நாட்டின் வாகனம்   அது­வாகும். அது மிகவும் உய­ரிய தொழில்­நுட்ப வச­தியை கொண்ட கமரா பொருத்­தப்­பட்­டது. 

கேள்வி :- சஹ­ரானின் அரா­ஜ­கங்கள்  திகன  சம்­ப­வத்­துடன் அதி­க­ரித்­ததா ?

பதில் :- ஆம், அதனை வாய்ப்­பாக பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர். ஆத­ரவும் கூடி­யது. 

கேள்வி :- இவ்­வ­ளவு தொழில்­நுட்ப வச­திகள் தகவல் இருந்தும் சஹ­ரானை ஏன் கைது­செய்­ய­வில்லை ?

பதில் :- பல வழி­களில் நட­வ­டிக்கை எடுத்தோம். சஹரான்  குறித்து அக­வல்­களை பல்­வேறு இடங்­களில் தேடினோம். முஸ்லிம் அதி­கா­ரி­களை நிய­மித்தும் தேடினோம் ஆனால் கிடைக்­க­வில்லை 

கேள்வி :- என்ன பல­வீ­ன­மாக இருந்­தது? உங்­களின் தொழில்­நுட்பம்  கைகொ­டுக்­க­வில்­லையா ?

பதில்:- அதனை பயன்­ப­டுத்த முடி­யாது போய்­விட்­டது 

கேள்வி :- ஏன் ?

பதில் :- நாலக சில்வா இட­மாற்றம் செய்­யப்­பட்டார். அவர் இல்­லாது சில நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாது போனது.  சில விசா­ர­ணை­களில் இருந்த கார­ணத்­தினால் எம்மால் வாக­னத்தை பயன்­ப­டுத்த முடி­யாது போய்­விட்­டது

கேள்வி :- ஏன் வாக­னத்தை பயன்­ப­டுத்­த­வில்லை? 

பதில் :- நாலக சில்­வா­விற்கு எதி­ரான விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்ட கார­ணத்­தினால் 

கேள்வி :- அதற்கும் வாக­னத்­திற்கும் என்ன தொடர்பு உள்­ளது? 

பதில் :- விசா­ரணை குழு இந்த வாக­னத்தை பயன்­ப­டுத்த முடி­யாது என கூறி­னார்கள். 

கேள்வி :- ஏன்? 

பதில் :- அதனை அவர்­க­ளிடம் தான் கேட்க வேண்டும் 

கேள்வி :- யார் அவ்­வாறு கூறி­யது? 

பதில் :- குற்றப் புல­னாய்வு பிரிவு.

கேள்வி :- நீங்கள் ஏன் சாட்­சி­யங்­களை ஆராய முயற்­சிக்­க­வில்லை.

பதில் :- முயற்­சிகள் எடுத்தோம். குறிப்­பாக முதல் முறைப்­பாடு செய்­த­வரின் வாக்­கு­மூலம் பெற முயற்­சித்தோம். 

கேள்வி :- யார் முதல் முறைப்­பாடு செய்­தது? 

பதில் :- காத்­தான்­குடி மௌலவி ஒருவர். 

கேள்வி :- யார் அவர் ?

பதில் :-  மௌலவி கே.ஆர்.எம் சஹலான் 

கேள்வி :- அவ­ரது வாக்­கு­மூ­லத்தை பதிவு செய­தீர்­களா ?

பதில் :- அவர் எழுத்து மூலம் நாளக சில்­வா­விடம் கொடுத்தார் 

கேள்வி :- அவ­ராக கொடுத்­தாரா ?

பதில் :- ஆம் 

கேள்வி  :- வாக்­கு­மூலம்  பெற­வில்­லையா?

பதில் :- இல்லை, முறைப்­பாட்டை எழுத்­து­மூலம் கொடுத்த கார­ணத்­தினால்  

கேள்வி :- பின்னர் ஒன்றும் செய்­ய­வில்­லையா? 

பதில் :- சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு 6.7.2017  மற்றும் சிறிது காலம் கடந்தும் இரண்டு  கடி­தங்கள்   அனுப்­பினோம் 

கேள்வி :- என்ன எதிர்­பார்த்­தீர்கள் ?

பதில் :- தவ்ஹித் ஜமாத் அமைப்பை தடுக்­கவும் சஹ­ரானை கைது செய்­யவும் கோரிக்கை விடுத்தோம். இந்த காலங்­களில் பல விசா­ர­ணை­களை நடத்­தினோம். அதில் ஒன்­றுதான் சஹரான் குறித்த விசா­ர­ணை­யாகும். 

கேள்வி :- நீங்கள் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பிய  கோப்பில் குறை­பா­டுகள் இருப்­பது தெரி­யுமா ?

பதில் :- இருந்­தி­ருக்கும் ஆனால் எனக்கு தெரி­ய­வில்லை, எமக்கு இருக்கும்,  கிடைக்கும் தக­வல்­களை கொண்டே அனுப்­பினோம். 

கேள்வி :- சட்­டமா அதிபர் திணைக்­கள அதி­கா­ரிகள் கூறும்­போதும் தக­வல்கள் போதாது என்றே கூறி­னார்கள் ?

பதில் :- எமக்கு கிடைத்த எம்­மிடம் இருந்த தக­வல்­களை கொண்டே நாம் அனுப்­பினோம் 

கேள்வி :- சஹரான்  முன்­வைத்த கதைகள் குறித்து நீங்கள் பார்த்­தீர்கள் தானே ?

பதில் :- ஆம் 

கேள்வி :- அப்­போதும் அது குறித்து சாட்­சி­யங்­களை தேட­வில்­லையா ?

பதில் :- ஆதா­ரங்­கள கிடைக்­க­வில்லை.  இணைய கருத்­துக்­களை கொண்டே நாம் ஆதா­ரங்­களை தேடினோம்.  

கேள்வி :- என்.டி .ஜே அமைப்பை தடுத்­தி­ருந்தால் இவ்­வா­றான செயற்­பா­டுகள் இடம்­பெற்­றி­ருக்­காது என்று தெரி­யுமா? 

பதில் :- ஆம் 

கேள்வி :- அப்­ப­டி­யென்றால்  நீங்கள் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­துடன்  நெருக்­க­மான தொடர்பை  கையாண்­டி­ருக்க வேண்­டும்­தானே ? 

பதில் :- எமக்கு அவர்கள் கொடுக்கும் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­யவே நாம் அவர்­க­ளுடன்  நெருங்­குவோம் எத்­த­னையோ கோப்­புகள் அனுப்­புவோம் பதில் வரு­வ­தற்கு நீண்­ட­காலம் எடுக்கும் .  

கேள்வி :- காரணம் என்ன ?

பதில் :- வேலைப்­பளு அவர்களுக்கும் உள்ளது,  

கேள்வி:- ஆனால் விளைவு மக்களின் மரணம் ? 

பதில் :- சஹரான் குறித்து நாம் பல காரணிகளை தேடி அவரை நெருங்கினோம் ஆனால் எம்மை விட்டு  சூட்சமமாக  அவர் தப்பித்துகொண்டார். 

கேள்வி :- இராணுவ தளதியின் சாட்சியில் அவர் கூற முயற்சித்தபோது இராணுவ புலனாய்வு  அதிகாரிகளை கைதுசெய்யும் விடயத்தில் பொலிசாருடன்  முரண்பாடுகள் ஏற்பட்டதாக கூறினார். 

பதில் :- இராணுவ புலனாய்வுடன்  நாம் நெருக்கமாக இருந்தோம் இன்றும் அவ்வாறே இருக்கின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18