உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை?  சமல் திலிப பீரிஸின் சாட்­சியம் 

Published By: R. Kalaichelvan

02 Aug, 2019 | 11:42 AM
image

(ஆர்.யசி)

சஹ்ரான் மற்றும் தௌஹீத் ஜமாஅத் அமைப்­பினர்  காத்­தான்­கு­டியில் அட்­ட­காசம் செய்­கின்­றனர் என்று சஹ்லான் மௌலவி 2017ஆம் ஆண்டில் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு முறைப்­பாடு ஒன்­றினை கொடுத்­த­வுடன் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வுக்கும் முறைப்­பாடு செய்­துள்ளார். இரண்டு வரு­டங்­க­ளாக குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன் என்ற கேள்வி உள்­ளது  என்று  பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் சமல் திலிப பீரிஸ் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­குழு முன்­னி­லையில் சாட்­சி­ய­ம­ளித்தார்.

 

அத்­துடன் இது குறித்து நாம் பொலிஸ்மா அதி­ப­ருக்கு தெரி­வித்து அவர் நட­வ­டிக்கை எடுக்­கா­தது ஏன் என்ற கேள்வி சட்­டமா அதிபர் திணைக்­களம் பக்கம் உள்­ளது. ரி.ஐ.ரி. யினால் எமக்கு அனுப்பி ஆலோ­சனை வழங்­கக்­கோ­ரிய கோப்­பு­களில் ஆதா­ரங்கள் இல்­லாது  ஆலோ­சனை வழங்க முடி­யாது   அவர் குறிப்­பிட்டார். 

உயிர்த்த ஞாயிறு   தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தி பாரா­ளு­மன்­றத்­திற்கு அறிக்கை சமர்ப்­பிக்க நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற விசேட தெரி­வுக்­குழு நேற்று வியா­ழக்­கி­ழமை பிற்­பகல் பாரா­ளு­மன்ற கட்­டி­டத்­தொ­கு­தியில் கூடி­யது. இதில் சாட்­சி­ய­ம­ளிக்க வந்­தி­ருந்­த­போதே அவர் இவற்றை குறிப்­பிட்டார்.   அவர் வழங்­கிய சாட்­சி­யத்தின் விபரம் வரு­மாறு 

குழு :- தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நீங்கள் சில கார­ணி­களை கூற வேண்டும் என வேண்­டுகோள் விடுத்­தீர்கள். அதற்­க­மை­யவே உங்­களை அழைத்­துள்ளோம். ஆகவே நீங்கள் கூற­வேண்­டிய விட­யங்­களை இப்­போது முன்­வைக்க முடியும். 

திலிப பீரிஸ் :-  சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் கடந்த  2017 ஆம் ஆண்டு அனுப்பி வைக்­கப்­பட்ட கடிதம் ஒன்று குறித்து இந்த குழு முன்­னி­லையில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. அதா­வது குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­வி­னரால் கடந்த 2017ஆம் ஆண்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டது. பொறுப்­புள்ள திணைக்­க­ள­மாக  நாம் அரச அதி­கா­ரிகள் அரச சேவை­யினை தெரிவு செய்­துள்ளோம். எமது கௌர­வமும் திணைக்­கள  தரமும் எமக்கு முதன்­மை­யா­ன­வை­யாகும். பொரு­ளா­தார நோக்­கங்கள் எமக்கு முக்­கியம் இல்லை. எவ­ருக்கும் கட்­டுப்­ப­டாத வகையில் செயற்­ப­டவே நாம் நினை­கின்றோம். எனினும் எமது நிறு­வன அதி­காரி ஒரு­வ­ருக்கு  அவப்­பெயர் வரும் என்றால் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்­க­மைய தெரி­வுக்­குழு முன்­னி­லையில் நாம் வர கோரிக்கை விடுத்தோம். கடந்த காலத்தில் பேசப்­பட்ட குறித்த கோப்­பையும் நான் கொண்­டு­வந்­துள்ளேன். 

அரச அதி­காரி அல்­லது சட்­டமா அதிபர் சுயா­தீ­ன­மாக  ஆலோ­ச­னை­களை  வழங்க முடியும். அதற்­க­மைய சட்­ட­வ­றி­ஞர்கள்  பொலிஸ்  அதி­கா­ரி­களின் மனுக்கள் வரு­கின்­றன. இது குறித்து நீதி­மன்ற செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இதில் குற்­ற­மா­னது சாதா­ரண சந்­தே­கத்­துக்கு அப்பால் உறு­திப்­ப­டுத்த முடிந்த ஆதா­ரங்­களை கொண்டே தீர்­மானம் எடுக்­கப்­படும். சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தில் குற்­ற­வியல் மற்றும் சிவில் வழக்­குகள் குறித்த பிரி­வுகள் உள்­ளன. இதில் போதைப்­பொருள் விவ­கா­ரங்கள் குறித்தும் சிறுவர் துஸ்­பி­ர­யோகம், பயங்­க­ர­வாத செயற்­பா­டுகள் குறித்து பிரி­வு­க­ளாக செயற்­படும் அதி­கா­ரிகள் உள்­ளனர். இதில் பயங்­க­ர­வாத கார­ணி­யொன்று  வரு­மென்றால்  அது ஆசாத் நவா­வியின் பிரி­வுக்கு செல்லும். இவை குறித்து  இறு­தி­யாக சட்­டமா அதி­ப­ருடன் கலந்­து­ரை­யாடி தீர்­மானம் எடுக்­கப்­படும். எம்.பி என்ற பிரிவு ஒன்று உள்­ளது.  இது  நேர­டி­யாக சட்­டமா அதி­பரின் கீழ் மக்­களின் குறை­களில் ஆராயும் பிரி­வாகும். அவ்­வாறு இருக்­கையில்  2017 ஆம் ஆண்டு  முஸ்லிம் அமைப்­பொன்றின்  மூல­மாக சட்­டமா அதி­ப­ருக்கு கோப்பு ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது. சட்­டமா அதிபர் ஜெயந்த ஜெய­சூ­ரி­யவின் பெய­ருக்கே வந்­துள்­ளது. நீதி அமைச்சர், பொலிஸ்மா அதிபர் அற்றும் அரச அதி­கா­ரிகள் சில­ருக்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது. பின்னர் நவா­விக்கு அனுப்பி வைக்­கப்­பட்ட கடி­தத்­துடன் ஒப்­பிட்டு பார்த்தேன். 

இதில் அனுப்­பி­வைக்­கப்­பட்ட நபர் மீண்டும் அதே கடி­தத்தை சில மாற்­றங்­களை செய்து அனுப்பி வைத்­துள்ளார் என்றே தெரி­கின்­றது. இந்த கடிதம் குறித்து சட்­டமா அதி­ப­ருடன் பேச முன்னர் முதலில் இந்த கடி­தத்தை நான் படித்தேன். இதில் முதல் வாக்­கியம் " நாம் முஸ்லிம் சமூ­கத்­தினர் " என்ற கார­ணி­க­ளுடன்  ஆரம்­பித்­துள்­ளது. இரண்டாம் வாக்­கி­யத்தில் இஸ்லாம் என்றால் என்ன என்ற கார­ணி­களை முன்­வை­துள்ளார். இறு­தி­யாக இந்த நாட்டின் அமைதி நல்­லி­ணக்­கத்தை நாச­மாக்க எந்த அமைப்­பு­க­ளுக்கும் அனு­ம­திக்க முடி­யாது. எனினும் சில இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்­புகள் காத்­தான்­கு­டியில் உரு­வாகி வரு­கின்­றது என்று கூறி சில கார­ணி­களை முன்­வைத்­துள்ளார். இதில் இருந்து எனக்கு  என்ன விளங்­கி­யது என்றால், என்.டி.ஜே என்ற அமைப்பு அதா­வது தேசிய தொவ்ஹித் ஜமாஅத்  மற்றும் சஹரான் என்ற அவ்­வ­மைப்பின் தலை­வரின்  மூலம் உரு­வாக்­கப்­பட்டு, அங்கு மக்கள் குழப்­ப­ம­டைந்­துள்­ள­தா­கவும் அதனை தீர்த்து தாருங்கள் என்­றுமே அதில் கூறப்­பட்­டுள்­ள­தாக நான் கரு­தினேன். இந்த கடி­தத்­துடன் சில  புகைப்­ப­டங்­களும் இணைக்­கப்­பட்­டன. இதில் குறிப்­பிட்ட சில படங்­களை நான் அவ­தா­னித்தேன். இதில் நடு­வீ­தியில்  வாள்­க­ளுடன் சிலர் இருப்­பதும் சிலர் காய­ம­டைந்­துள்­ள­தா­கவும் இருந்­தது. 

கேள்வி :- இந்த புகைப்­ப­டங்­களில் எத­னையும் அடை­யா­ளப்­ப­டுத்த முடி­யுமா ?

பதில் :- இதில் ஒரு நபர் அணிந்­துள்ள டி-ஷர்ட்  இல் வெள்­ளை­நிற அடை­யாளம் ஒன்று உள்­ளது. இது ஐ. எஸ் அமைப்பின் சின்­னத்­துக்கு  ஒப்­பான ஒன்­றாகும். மற்­றை­யதில் சஹரான் என்ற நபர் இருப்­பதும் உள்­ளது. எனினும் இந்த மௌலவி காத்­தான்­கு­டியில் இருந்து இங்கு வந்து சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­திற்கு  தனது கைகளால் இந்த கடி­தத்தை வழங்க முக்­கி­யத்­துவம் இருக்க வேண்டும். அதற்கு எமது முக்­கி­யத்­து­வமும் கொடுக்­கப்­பட வேண்டும். ஆகவே நான் சட்­டமா அதி­ப­ருடன் பேசினேன். சட்­டமா அதிபர் ஜெயந்த ஜெய­சூ­ரி­ய­விடம் இந்த கார­ணி­களை கூறி­ய­வுடன் அவரும் ஆச்­ச­ரி­ய­ம­டைந்தார். இலங்­கையில் இவ்­வாறு இடம்­பெ­று­கின்­றதா என கேள்வி எழுப்­பினார். இதற்கு பிர­தேச பொலி­ஸாரை  பயன்­ப­டுத்தி சரி­வ­ராது பிர­தான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என கூறினார்.

கேள்வி :- அந்த மௌல­வியின் பெயர் என்ன ?

பதில் :- சஹ்ரான், 

இந்த கடி­தத்தில் அவர் கூறிய விட­யங்­களை நான் சட்­டமா அதி­ப­ருக்கு  கூறினேன். அதனை வாசித்துக் காட்­டினேன். அதற்­க­மைய அவர் விசா­ரணை அறிக்­கை­களை பெற்­றுத்­த­ரும்­படி கேட்­டுக்­கொண்டார். சாதா­ர­ண­மாக எமக்கு வரும் கடி­தத்தின்   பிரதி ஒன்றை பொலிஸ்மா  அதி­ப­ருக்கு அனுப்­புவோம். ஆனால் இம்­முறை நான் அவ்­வாறு செய்­யாது சஹ்லான் மௌல­வியின் கடி­தத்தின் பிர­தி­யுடன் சட்­டமா அதி­பரின் கோரிக்­கையை உள்­ள­டக்கி அனுப்­பினேன். பொலிஸ்மா அதி­ப­ருக்கு விசா­ரணை நடத்தி அறிக்­கையை  தர­வேண்டும் என நான் 2017 ஆம் ஆண்டு அனுப்­பினேன். சில காலங்­களின் பின்னர்  2017. 7. 21 ஆம திகதி   மீண்டும் சஹாலான்  மௌலவி  சட்­டமா அதி­ப­ருக்கு கடிதம் ஒன்­றினை அனுப்­பினார். அதா­வது முதலில் அவர் அனுப்­பிய கடிதம் குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை ஏற்­ப­டுத்தி தரு­மாறு அவர் கோரி­யி­ருந்தார். கலந்­து­ரை­யா­டலை ஏற்­ப­டுத்தும் அதி­காரம் எனக்கு இருக்­க­வில்லை. ஆனால் இந்த கடிதம் குறித்து நான் சற்று அவ­தானம் செலுத்­தி­யி­ருந்தேன். இரண்­டா­வது கடிதம் கிடைத்­த­வுடன் மீண்டும் கடிதம் ஒன்­றினை அவ­ருக்கு அனுப்­பினேன். அதில் பொலிஸ்மா  அதி­ப­ருக்கு நாம் உரிய கார­ணி­களை கொடுத்­துள்­ள­தாக நான் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தேன். மீண்டும் சஹலான் மௌலவி கடிதம் ஒன்­றினை அனுப்­பினார். அதில் எமது முயற்­சி­க­ளுக்கு  நன்­றி­களை கடி­தத்தில் தெரி­வித்­தி­ருந்தார்.  

கேள்வி :- எப்­போது இந்த கடிதம் வந்­தது 

 பதில் :- 17.09.04 இந்த கடிதம் வந்­தது. 

எனது கண்­கா­ணிப்பு அதி­கா­ரியின் பதி­வேட்டில் சஹலான் மௌலவி தொடர்­பு­கொண்ட இலக்­கத்தை பதிவு செய்­தி­ருந்தேன். சஹரான் குறித்து விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு அவர்­க­ளுக்கு பிணை வழங்க முயற்­சிகள் எடுக்­கப்­ப­டு­கின்­றன அதனை தடுக்க வேண்டும் என கூறினார். அதற்­க­மைய காத்­தான்­குடி  பிரதி பொலிஸ்மா அதி­ப­ருக்கு என்னை சந்­திக்க தகவல் அனுப்­பினேன். கஸ்­தூரி ரத்ன என்ற நபர் என்னை வந்து சந்­தித்தார். அவர் முழு­மை­யான அறிக்கை ஒன்­றினை என்­னிடம் ஒப்­ப­டைத்தார். முழு சம்­ப­வமும் அதில் இருந்­தது. தேசிய தவ்ஹித் ஜமாஅத்  அமைப்­பிற்கும்  எமக்கு கடிதம் அனுப்­பிய அமைப்பு ஆகிய இரண்டு அமைப்­புமே மோதல்­களில் ஈடு­பட்டு கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரிந்­தது. பின்னர் இந்த நபர்­க­ளுக்கு பிணை வழங்க வேண்டாம்  எனவும் அதனை தடுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என ஆலோ­சனை வழங்­கினேன். 

சஹ்ரான் மௌல­விக்கு  மீண்டும் நான் அறி­யப்­ப­டு­தினேன். நீங்கள் கோரிய காரணி குறித்து நட­வ­டிக்கை எடுக்க ஆலோ­சனை வழங்­கி­யுள்ளேன். இது குறித்து மேல­திக தக­வல்­கள கிடைத்தால் காத்­தான்­குடி போலிஸ் நிலை­யத்தில் கூறு­மாறும் கடி­தத்தில் அனுப்­பினேன்.  அதன் பின்னர் மௌலவி எனக்கு கடிதம் அனுப்­ப­வில்லை. ஆனால் மௌலவி அனுப்­பிய கடி­தங்­க­ளுக்கு நான் பொலிஸ்மா அதி­ப­ருக்கு விடுத்த கோரிக்­கைக்கு  இன்­று­வரை எமக்கு எந்த பதிலும் வர­வில்லை. அதே­நேரம் இந்த விட­யத்தின் பார­தூ­ரத்தை சட்­டமா அதிபர் அவ­தா­னித்தார். யார் என்ன விடயம் என்­றெல்லாம் எனக்கு தெரி­யாது ஆனால் நான் ஆரம்­பத்தில் இருந்தே வலி­யு­றுத்தி இருந்தேன்.  இந்த விட­யங்­களை குறித்து விசா­ர­ணைகள் நடப்­பதை அறிந்தேன். 

கேள்வி :- எப்­போது அறிந்­தீர்கள்? 

பதில் :- தாக்­கு­த­லுக்கு பின்னர் அறிந்தேன். 

நவா­வியை  சந்­தித்த பின்னர் உங்­களின் மத  மௌலவி ஒருவர் கடிதம் அனுப்­பு­கின்றார் அது குறித்து சற்று  ஆராய்ந்து பாருங்கள் என நான் கூறினேன். இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்பு குறித்த நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்­பதே அந்த கடி­தத்தின் சாராம்சம். இது குறித்த மேல­திக தக­வல்கள், விசா­ர­ணைகள் குறித்து எனக்கு தெரி­யாது. இது குறித்து பொலிஸ்மா அதி­ப­ருக்கு நான் கூறியும் அவர் விசா­ர­ணை­களை நட­தி­யி­ருதால் அதனை எனக்கு கடிதம் மூல­மாக தெரி­வித்­தி­ருக்க முடியும். ஆனால் இன்­று­வரை எந்த கடி­தமும் வர­வில்லை. முதலில்  முறை­யிட்ட மௌலவி எம்­மிடம் கடிதம் கொடுத்த  அன்றே குற்­றப்­பு­ல­னாய்வு விசா­ரணை பிரி­வி­டமும் கொடுத்­துள்ளார். ஆனால் அவ­ரிடம் வாக்­க­மூலம் பெற இரண்டு ஆண்­டுகள் சென்­றுள்­ளது. 

கேள்வி :- இரண்டு ஆண்­டுகள் என்றால் எப்­போது பதி­வா­கி­யது ?

பதில் :- இந்த சம்­பவம் தெரிய வந்­த­வுடன் குற்ற விசா­ரணை  பிரிவு  கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யுள்­ளது. 2019.05.05 திகதி வந்­துள்­ளது.சஹரான் மௌலவி  மற்றும் சிலர் நாட்டின் ஐக்­கி­யத்தை அழிக்கும்  விதத்தில் செயற்­பட்டு வரு­வ­தாக  2017 ஆம் ஆண்டு சஹலான் மௌலவி ஆத­ரங்­க­ளுடன் ஒப்­ப­டைத்தார் என கூறி­யுள்­ளது. எமக்கு உள்ள பிரச்­சினை என்­வென்றால்  மௌலவி கொடுத்த கடிதம் தொடர்பில்  நாம் சகல நட­வ­டிக்­கையும் எடுத்தோம். அவர் இந்த தாக்­குதல் குறித்து தூர­நோக்­குடன் சிந்­தித்து இந்த கடி­தத்தை எம்­மிடம் கொடுத்­துள்ள நிலையில்  அதற்­கான நட­வ­டிக்கை  எடுத்­துள்ள  நிலையில் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­பதே எமது கேள்வி. 

குழு :- நாம் இது குறித்து பல­த­ரப்­பட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்ளோம். நீங்கள் இன்று கூறும் விட­யங்கள் என்­பன எவ்­வாறு இருந்­தாலும் இந்த முறைப்­பாடு கடிதம் மூல­மாக ரி.ஐ.ரி. க்கு வந்த குற்­றங்கள் குறித்து சட்­டமா அதி­ப­ருக்கு எழு­தப்­பட்­டது. நீங்கள் கூறிய கார­ணி­க­ளுடன் நான் இணங்­கு­கிறேன். இங்கு சாட்­சி­யங்கள் முழு­மை­யாக ஊட­கங்­களில் பதிவு செய்­ய­வில்லை. எமது விசா­ர­ணை­களில் சரி­யாக முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. 

சாட்சி :- இது எமது திணைக்­களம். நவா­வியும் நானும் ஒரே சார்­பான ஊழி­யர்கள். அர்ப்­ப­ணிப்­புடன் நாம்  இதனை செய்து வரு­கின்றோம். பல அழுத்­தங்­களின் மத்­தியில் நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். சில முக்­கிய வழக்­கு­களை நாம் இன்றும் முன்­னெ­டுத்து வரு­கிறோம். சர்ச்­சைக்­கு­ரிய சில வழக்­கு­களை நான் செய்து வரு­கின்றேன். இது எமது தனிப்­பட்ட வாழ்க்­கையை  பணயம் வைத்தே செய்து வரு­கின்றோம். அவ்­வாறு இருக்­கையில் இவ்­வா­றான  ஒரு விட­யத்தில் எம்மை அவ­ம­திப்­பது தவ­றா­னது. இந்த கடிதம் குறித்து பொலிஸ்மா அதி­ப­ருக்கு தெரி­வித்து ஆராய வேண்டும் என்று கூறி­யுள்ளேன்.  

எமக்கு அனுப்­பிய ஆலோ­சனை கோப்பில்  முகப்­புத்­தக கணக்கின் புகைப்­ப­டங்கள், மற்றும் இரண்­டா­வது கோப்பில்  அதே போன்று அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளன. சஹரான்  பயங்­க­ர­வாதி என்றால் எம்­மிடம் ஏன் கேட்க வேண்டும், முதலில் கைது செய்­தி­ருக்க வேண்டும். எம்மை பார்த்­து­கொண்டு இருக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. இறு­தி­யாக  அனுப்­பிய மூன்­றா­வது கோப்பில்  பயங்­க­ர­வாத விசா­ரணை பிரிவு விசா­ரணை நடத்தி அனுப்பி வைத்­துள்ள கார­ணியில் மிகவும் மோச­மாக நகைப்­புக்­கு­ரிய கார­ணி­களே இருந்­தது. சரி­யாக குற்­றச்­சாட்டை ஆதா­ரத்­துடன் நிரூ­பிக்க முடி­யாத  நிலையில் எவ்­வாறு  நாம் நட­வ­டிக்கை எடுக்க முடியும். 

சுமந்­திரன் :- சற்று அமை­தி­யாக கேளுங்கள், நீங்கள் ஆரம்பம் முதலே சரி­யாக கார­ணி­களை கூறி­னீர்கள். இந்த தக­வல்கள்  போத­வில்லை என்றால் வேறு தக­வல்­களை பெற்­றி­ருக்க முடியும். சட்­டமா அதிபர் திணைக்­கள  அதி­கா­ரிகள் நீதி­மன்­றத்தில் சென்று  சாட்­சி­ய­ம­ளிக்க  கூற­வில்லை,  

ஜெயம்­பதி :- நீங்கள் முன்­வைத்த அறிக்­கையில் வேறு கார­ணிகள் இருக்­கின்­றதா ?

பதில் :- இதில் பார­தூ­ர­மான விடயம் உள்­ளது. இவ்­வாறு கடி­த­த­லைப்­பு­களில் கோரிக்கை விடுத்த முதல் சந்­தர்ப்பம் இது­வாகும். முகப்­புத்­த­கங்­களை  பார்த்து செயற்­பட வேண்­டிய அவ­சியம்  பயங்­க­ர­வாத தடுப்பு பிரி­வுக்கு இல்லை. இவர்கள் செயற்­பாட்டில் இருக்க வேண்டும். காத்­தான்­குடி ஓ.ஐ.சியை நான் வர­வ­ழைக்க நேர­டி­யாக கூற­வில்லை. உயர் அதி­கா­ரி­களின் மூல­மா­கவே அழைப்பு விடுத்தேன். அவர் வந்­த­வுடன் ,குறித்த புகைப்­ப­டங்­களை காட்­டினேன். காத்­தான்­கு­டியில் இவ்­வாறு  மோச­மாக நடந்­துள்ள நிலையில் பொலிஸ் வேடிக்கை பார்க்­கி­றீர்­களா என கேட்டேன். 

கேள்வி :- அவர் என்ன பதில் கூறினார் ?

பதில் :- அவற்றை இதில் கூறு­வது முறை­யில்­லையே 

கேள்வி :- இல்லை நீங்கள் கூறுங்கள் என்ன கூறினார் அவர் ? 

பதில் :- அர­சி­யல்­வா­தி­களின் அழுத்தம் கார­ண­மாக செய்ய முடி­யாது என்றார். என்­றாலும் அர­சியல் செயற்­பா­டு­க­ளுக்­காக  பொது­மக்­களை துன்­பு­றுத்த இட­ம­ளிப்­பதா என்ற கேள்­வியே எம்­மிடம் இருந்­தது. 

கேள்வி :- நீங்கள் உணர்ச்­சி­வ­சப்­பட்டு பேசு­கின்­றீர்கள். ஆனால் உங்­களின் கார­ணி­களை நீங்கள் கூறு­கின்­றீர்கள். அது நல்ல விடயம். நாம் குழு­வாக இதில் இணைந்து செயற்­பட வேண்டும். யாரையும் நாம் குற்றம் சுமத்த இங்கு செயற்­ப­ட­வில்லை. இங்கு நாம் குறை­பா­டுகள் என்ன என்­ப­தையே ஆராய்­கின்றோம். உங்­களின் திணைக்­க­ளத்தில் வெவ்­வேறு  மூன்று கடி­தங்கள் உள்­ளன. இதில் அதி­கா­ரிகள் மட்ட பிரச்­சி­னைகள் இல்லை. தொடர்­பாடல் பிரச்­சி­னையே உள்­ளது. தொடர்­பா­டல்­களில்  சிக்கல் இருப்­ப­தாக நீங்கள் அறிந்­தி­ருன்­தீர்­களா ? வெவ்­வேறு அதி­கா­ரிகள் இருக்­கின்ற நிலையில் குறை­பா­டுகள் இருந்­ததா ?

பதில் :-  உண்­மையில் இதற்கு   விசா­ரணை ஆணைக்­கு­ழு­வுடன்  உள்ள தொடர்­பின்­மையே கார­ண­மாகும். இந்த செயற்­பாட்டில் டி.ஐ.டி ஒரு கட்­டத்தில் மௌன­மாக இருந்­தது. ஆனால் பொலிஸ்மா அதிபர் அதி­கா­ரங்­களை கொண்டு வலி­யி­றுத்­தி­யி­ருக்க முடியும். இதில் பிரச்­சினை இருப்­ப­தாக நாம் உணர்ந்தோம். குண்டு வெடிப்பு இடம்­பெற்­ற­வுடன் இந்த உணர்வு வந்­தது. பொலிஸ்மா அதிபர் சற்று அக்­கறை  செலுத்­தி­ருந்தால் இந்த தாக்­கு­தலை தடுத்­தி­ருக்க முடியும் என்றே எண்ணம் எமக்கு வந்­தது.  ஏதா­வது ஒரு பிரச்­சினை வந்­த­வுடன் சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தை சாட்டி நாம்  பதில் வழங்­க­வில்லை என கூறி­வி­டு­கின்­றனர். 

கேள்வி :- எப்­போது மக்கள் குறைகேள் பிரிவு ஆரம்­பிக்­கப்­பட்­டது?

பதில் :- 15 வரு­டங்­க­ளாக இருக்கும் 

கேள்வி :- சஹலான் கடிதம் மூலமும் தொலை­பேசி  மூலமும்  தொடர்பு கொண்­டுள்ளார் என்­பதை நீங்­களே கூறு­கின்­றீர்கள், . இவர் அர்ப்­ப­ணிப்­புடன் அப்­போதில் இருந்து செயற்­பட்­டுள்ளார் . உங்­க­ளுக்கு வந்த கடி­தங்­களில் இந்த கடி­தத்தை  உங்­களால் மறக்க  முடி­யாது. அப்­படி தானே ?

பதில் :- ஆம், இவ்­வா­றான அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் நபர்கள்  உள்­ளனர். 

கேள்வி :- ஆம். எவ்­வாறு இருப்­பினும் மக்­களின் பாது­காப்பை  உறு­திப்­ப­டுத்த உள்ள திணைக்­க­ளங்­களில்  சட்­டமா அதிபர் திணைக்­களம்  இவ்­வா­றான நிலையில் எல்­லைக்கு அப்பால் என்ன செய்ய முடியும் என நினைக்­கின்­றீர்கள் ?

பதில் :- இவ்­வா­றான மனுக்கள் வரும்­போது எம்மால் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு தெரி­யப்­ப­டுத்த முடியும். காத்­தான்­குடி விட­யத்தில்  உரிய காரியம் நடக்க வேண்டும் என்றே நினைத்தேன். அதனால் தான் உயர் அதி­கா­ரி­க­ளுக்கு கூறியும் ஓ.ஐ.சி யை வர­வ­ழைத்தும் முயற்­சி­களை எடுத்தேன். 

கேள்வி :- இந்த கடிதம் ஜனா­தி­ப­திக்கு, சட்­டமா அதி­ப­ருக்கு வேறு சில­ருக்கு அனுப்­பி­யுள்­ளாரா? 

பதில் :- அனுப்­பி­ய­தாக இருந்­தாலும் கிடைத்­ததா என்று தெரி­யாது.  

கேள்வி:- அப்­போது நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவிற்கும் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்­ளது.  

பதில் :- ஆம் 

கேள்வி :- அது உறு­தி­யாக தெரி­யுமா? உங்­க­ளுக்கு பதில் வர­வில்­லையா? 

பதில் :- அவர் வேறு கடி­தங்­க­ளுக்கு எல்லாம் பதில் அனுப்­புவார்.  ஆனால் இந்த கடி­தத்­திற்கு எந்த பதிலும் வர­வில்லை. 

கேள்வி :- சட்­டமா அதி­ப­ருக்கு நேர­டி­யாக கொடுத்தால் மட்­டுமா நீங்கள் முக்­கி­யத்­துவம் கொடுப்­பீர்கள்?

பதில்:- கையில் கொடுத்­த­தற்கு முக்­கியம் கொடுக்­க­வில்லை,ஆனால் காத்­தான்­கு­டியில் இருந்து மௌலவி ஒருவர் வந்து கொடுத்த கடி­தத்தை பார்த்து அதற்கு நாம் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஏனை­யவை தபால் மூல­மாக வந்­தாலும் அவற்­றுக்கும் முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்றோம். ஆனால் உண்­மை­யான முஸ்லிம் மனி­த­ராக தமக்கு அமை­தி­யாக வாழ­வேண்டும் என்ற கோரிக்­கையை அவர் விடுத்­துள்ளார். அதற்கு நாம் முக்­கி­யத்­துவம் கொடுக்க வேண்டும் ன்று நினைத்தேன். இந்த பயங்­க­வ­ராத அமைப்பு சர்­வ­தேச அமைப்­பு­க­ளுடன் தொடர்­பு­பட்ட அமைப்­புகள் இவர்­களை ஐ.சி.சி.பி.ஆர் என்று கூறி கைவி­டக்­கூ­டாது.   அதிக கவ­னத்­துடன் பார்க்க வேண்­டிய விட­ய­மாகும். சஹரான்  விட­யத்தில் அவ­ரது பிரச்­சா­ரங்­களை எமக்கு அனுப்­பி­யுள்­ளனர். இது­கு­றித்து யார் தீர்­மானம் எடுக்க வேண்டும் நானா ? இதற்கு உரிய நபர்கள் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க வேண்டும்.  இன்­று­வரை எமக்கு கொடுத்­துள்ள கோப்­பு­களில் எந்த ஆதா­ரங்­களும் இல்­லாத சாட்­சிகள் மட்­டுமே உள்­ளன. சில காகி­தங்­களை வைத்து எவ்­வாறு வழக்கு தொடர்­வது. 

 கேள்வி :- அடுத்த கோப்­புக்கு  ஏன் நீங்கள் பதில் கூற­வில்லை ?

பதில் :- அதற்கு எதி­ராக வழக்கு தொட­ரவும் முடி­யாது. அதில் 14 இறு­வெட்­டுக்கள் மட்­டும்தான்  உள்­ளன. 

கேள்வி :- நான் பொறு­மை­யாக கேட்­கிறேன் நீங்கள் ஆவே­சப்­பட  வேண்டாம்.

பதில் :- எனது இயல்பு அது.

கேள்வி :- சக்­திக்க என்ற நபரை இந்த விட­யத்தில்   மூன்று மாதங்­க­ளாக  கைதில் வைத்­துள்­ளனர். அவர் முகப்­புத்­த­கத்தில்  இன­வாத கருத்­துக்­களை முன்­வைத்தார்,அதற்கு நட­வ­டிக்கை எடுக்க முடிந்­தது என்றால் இதில் ஏன் அவ்­வாறு செய்ய முடி­யாது ?

பதில் :- அது வேறு இது வேறு, சக்­திக்க விட­யத்தில் முறைப்­பா­டு­கள உள்­ளன. சஹரான்  விட­யத்தில் அவ்­வா­றான முறைப்­பா­டுகள் இல்லை.

கேள்வி :- இரு­வெட்­டுக்­களில் உள்ள கருத்­துக்­களில் முரண்­பா­டுகள் தெரி­ய­வில்­லையா ?

பதில் :- இருந்­தன, 

கேள்வி :- அப்­போது ஏன் நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை ?

பதில் :- யார் சாட்­சி­ம­ளிப்­பது? நானா சாட்­சி­ய­ம­ளிக்க முடியும். 

கேள்வி :- சக்­திக்க விட­யத்தில் முறைப்­பாடு உள்­ளது இதில் சஹ்லான்  மௌல­வியும் முறைப்­பாட்டை கொடுத்­துள்ளார். இதில் போலீ­சாரும்  உங்­க­ளிடம் ஆலோ­சனை கேட்­டுள்­ளனர். கைது செய்ய ஒரு ஆலோ­சனை வழங்­குங்கள் என கூறி­யுள்­ளனர். சஹரான் குறித்து கார­ணிகள் கூறப்­பட்­டுள்­ளன. நீங்கள் ஏன் ஆலோ­சனை வழங்­க­வில்லை. இந்த தவறில் இருந்து நீங்கள் தப்­பிக்க முடி­யாது.

பதில் :- இரண்டு விதத்தில் பார்ப்­ப­தாக கூறும் கார­ணியை நான் ஏற்­று­கொள்ள மாட்டேன். பயங்­க­ர­வாதி ஒருவர் கொலை­களை செய்ய தயா­ராக உள்ளார் என்றால் குற்­ற­வியல் சட்­டத்தில் ஆலோ­ச­னைகள் உள்­ளன. இதில் எமது ஆலோ­ச­னைகள் அவ­சியம் இல்லை.கைது செய்­யலாம். அதேபோல் ஐ.சி.சி.பி.ஆர் சட்­டத்தை விட குற்­ற­வியல்  சட்டம் பார­தூ­ர­மா­னது. குற்­ற­வியல் சட்­டத்தில் தான் இதனை கையாள வேண்டும். 

கேள்வி :- இல்லை,உங்­க­ளிடம் கேட்ட கேள்­விக்கு நீங்கள் ஆலோ­சனை வழங்­க­வில்லை. ஐ.சி.சி.பி.ஆர் மற்றும் குற்­ற­வியல் சட்டம் இரண்டும் நெருக்கமானது. நீங்கள் ஏன் ஐ.சி.சி.பி.ஆர்இல் இதனை கேட்கின்றனர்  என சிந்தித்து பார்த்திருக்க வேண்டும். 

பதில் :- இவை கணினி பயப்படுதப்பட்ட சான்றுகள். இவற்றை கையாள வழிமுறைகள் உள்ளன. 

கேள்வி :- அப்படியென்றால்  சக்திக்கவை கைதுசெய்த  விடயம் ? அவரே அவரை கைது செய்திருக்க முடியாதே. 

கேள்வி :- இது ஒன்றுக்கு  ஒன்று முரணான கருத்துக்களே?

பதில் :- அப்படி இல்லை, காணொளியில் அந்த நபர் நான்தான் உரிய நபர்  என்று உறுதியளிக்க வேண்டும். இதில் அவ்வாறு இல்லையே. 

கேள்வி :- கடிதத்தில் வந்ததும் பொலிசார்  அனுப்பியதும் ஒரே காரணி தானே ? 

பதில் :- ஆம், விடயம் ஒன்று தான். 

கேள்வி :- ஒரே காரணம் குறித்து இரண்டு கோப்புகள் வருகின்றன.அவ்வாறு  வரும் வேளையில் ஒரு விடயம் குறித்து இரண்டு மூன்று வழிமுறைகளில்  காரணிகள் வரும் வேளையில் நீங்கள் ஒரு விடயத்தில் பார்த்து சாட்சியங்கள் போதவில்லை என்றால் அதே விடயத்தில் மற்றைய ஆதாரத்தை வைத்து செயற்பட முடியாதா ?

பதில் :- இல்லை, இதில் கோப்பு வரும்வரையில்  விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. நாம் அதனையே பார்ப்போம். ஒரே நேரத்தில் கோப்புகள் கிடைக்கவும் இல்லை. 

கேள்வி :- கிடைத்தவுடனும் நீங்கள் ஒப்பிட்டு பார்க்கவில்லையா ? 

பதில் :- பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்துவது தெரியப்படுத்தியிருந்தால் நாம் அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்திருக்க முடியும். எமக்கு மட்டும் அல்ல மௌலவிக்கும் அறிவிக்கவில்லை. 

கேள்வி :- சட்ட வாத விவாதம் இருக்கலாம் ஆனால் ஒரு பயங்கரமான சம்பவத்துக்கு இவை அனைத்தும்.துணைபோன விடயஙகளாகும்.   மாற்றுவழி ஒன்றினை கையாள வேண்டும் தானே. 

பதில்  :- கடிதத்தில் இருக்கும் விடயமானது மத செயற்பாடுகள் என்று தான் உள்ளது, இறுதியாக அடிப்படைவாதத்திற்கு தள்ளபடும் என்றே கூறப்படுகின்றது. ஆனால் பயங்கரவாதம் என கூறவில்லை

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47