தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் முக்கியஸ்தரான கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன் குறித்த மனுவை எதிர்வரும் 30 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் கே.பி.யை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த மனு தொடர்பான விசாரணை இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பிரித்தி பத்மன் சூரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.