நகர சபை சுத்திகரிப்பு பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

01 Aug, 2019 | 07:12 PM
image

மன்னார் நகரசபையின் சுத்திகரிப்பு பணியாளர்கள் , சாரதிகள் உட்பட மன்னார் நகரசபையின் கீழ் தொழில்புரியும் ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை (1) காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அடையாள கவயீர்பு போராட்டம் ஒன்றை முன்னேடுத்துள்ளனர்.

மன்னார் நகரசபையின் கீழ் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் 44 ஊழியர்களுக்கு கடந்த 2003ஆம் ஆண்டு மன்னார் ஜீவபுரம் பகுதியில் முன்னால் மன்னார் பிரதேச செயலாளரினால் காணி வழங்கப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு காணி துண்டுகளுக்கான படமும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்ட நிலையில் 15 வருடங்கள் ஆகியும் இது வரை குறித்த துப்பரவு பணியாளர்களுக்கு குறித்த காணிகளுக்கான உறுதிபத்திரமோ அல்லது வீட்டுத்திட்டமோ அடிப்படை வசதிகலோ இதுவரை செய்யப்படவில்லை எனவும் , தாங்கள்   தொடர்ச்சியாக புறக்கணிக்கப்படுவதாகவும் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக உரிய அதிகாரிகளை சந்திக்க முற்படுகின்ற போதும் அவர்களை சந்திக்க முடியாமல் வெளியேற்றப்படுகின்றோம் என தொடர்ந்து தெரிவிக்கின்றனர்.

எவவே தங்களது நிலையை கவனத்தில் கொண்டு தங்களின் நியாயமான கோரிக்கையான 2003 ஆம் ஆண்டு காணிகள் வழங்கப்பட்ட 44 பேருக்கும் காணி உறுதி பத்திரங்களை உடன் வழங்க வேண்டும், 

அளவீடு செய்து ஒதுக்கப்பட்ட காணிகளை பிறருக்கு வழங்குவது உடன் நிறுத்தப்படல் வேண்டும் , காணிக்கு புதிதாக விண்ணப்பித்துள்ள 15 சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் காணிகள் உடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், காணி வழங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு வீட்டு திட்டம் மலசலகூடம் மின்சாரம் மற்றும் நீரிணைப்பு கிடைக்க உரிய நடவடிகை எடுக்க வேண்டும் போன்ற அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றிதர நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதுடன் குறித்த கோரிக்கைகள்  அடங்கிய மகஜர்களும் இன்று வியாழக்கிழமை (1)  மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திற்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் உரிய அதிகாரிகளுக்கும் கையளிக்கப்பட்டது.

குறித்த பிரச்சினை தொடர்பாக உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பணிப்புரை விடுத்தார்.

மன்னார் நகர சபையின் தலைவர், செயலாளர், மன்னார் பிரதேசச் செயலாளர் ஆகியோர் இவ்விடையம் தொடர்பில் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதீக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வை உடன் பெற்றுக்கொடுக்குமாறும்,குறித்த பகுதியில் வேறு இடங்கங்களைச் சேர்ந்தவர்களுக்கு காணி வழங்குவதை உடனடியாக நிறுத்த பிரதேசச் செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08