அபிவிருத்திக்குழு கூட்டத்தில் துப்பாக்கி கேட்ட செல்வம் எம்.பி.

Published By: Digital Desk 4

01 Aug, 2019 | 05:50 PM
image

வவுனியா அபிவிருத்திகுழு கூட்டத்தில் துப்பாக்கி இருந்தால் (சொட்கன்) எமக்கும் தாருங்கள் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேட்டிருந்தார்.

இன்று வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்திகுழு கூட்டத்தில் அண்மைக்காலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட சொட்கன்கள் (துப்பாக்கி) மீள எடுக்கப்பட்டமையினால் தற்போது விவசாயிகள் வன விலங்குகளால் பெரும் துன்பங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் விவசாயிகளுக்கு வனவிலங்குகளின் தாக்கம் அதிகரித்து வருவதனால் அவர்களது பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

எனவே அவர்களுக்கு மீண்டும் சொட்கன் (துப்பாக்கிகள்) வழங்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் சிவசக்தி ஆனந்தன் என தெரிவித்தார்.

இதன்போது எவ்வாறு துப்பாக்கியை வழங்கலாம் என அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவரான ரிசாட் பதியுர்தீன் பொலிஸாரிடம் கேட்டபோது அவர்கள் பாதுகாப்பு அமைச்சில் பெறவேண்டும் என தெரிவித்தார். 

அத்துடன் இராணுவ அதிகாரியும் குறித்த அனுமதியை இராணுவத்தினர் வழங்க முடியாது எனவும் தெரிவித்த நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் குறித்த விண்ணப்பம் மாவட்ட செலயத்தில் பெறப்பட வேண்டும் எனவும் அவ் விண்ணப்பத்தினை பெற்று அதற்குரிய பொறிமுறைகளின் பிரகாரம் மாவட்ட செயலகத்தில் ஒப்படைக்க முடியும் எனவும் அதன் பின்னர் அனுமதி பெற்று அதனை வழங்க நடவடிக்கை எடுக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.

இதன்போது குறுக்கிட்ட வன்னிப்பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திகுழுவின் இணைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தமக்கும் ஒரு துப்பாக்கியை தந்தால் நல்லம் என நகைச்சுவையாக தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் பழைய ஞாபகங்கள் வந்துள்ளதுபோல் உள்ளது என செல்வம் அடைக்கலநாதனை பார்த்து தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24