இலங்கையில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் போர்மலின்: அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

Published By: J.G.Stephan

01 Aug, 2019 | 04:48 PM
image

இலங்கையில் உணவு பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் போர்மலின் தொடர்பில் தாம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கைத்தொழில் மற்றும் வர்தக அலுவல்கள் நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்தல் கூட்டுறவு அபிவிருத்தி தொழிற்பயிற்சி திறனாற்றல் இராஜாங்க அமைச்சர் புத்திஹபத்திரண தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இதனை இறக்குமதி செய்வதற்கான அதிகாரம் பெற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கு முன்னர் அவ்வாறான நிலை இருக்கவில்லையெனவும், இந்த போர்மலின் சடலங்களின் (எம்பாமிற்காக) சடலத்தை நறுமணமூட்டி வைத்திருப்பதற்காக மாத்திரமே பயன்படுத்தப்படும் ஆனால் உணவுப்பொருட்களை நீண்டகாலம் வைத்திருப்பதற்காகவும் தற்பொழுது பயன்படுத்தப்படுவது கவலைக்குரிய விடயடமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் நாட்டில் உள்ள மலர்சாலைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மலர் சாலைகளின் எண்ணிக்கைக்கு அமைவாக இந்த போர்மலினை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஒழுங்கு விதிகளுக்கு அப்பால் சடலங்களை நறுமணமூட்டி பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் போர்மலின் விநியோகிக்கப்படுமாயின் விநியோகிப்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் அதிகார சபை சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கைத்தொழில் மற்றும் வணிக பணிகள் தொடர்பில் மூன்று தேசிய கொள்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். பால்மாவுக்கான விலைச் சூத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாண் விலைக்கான விலைச் சூத்திரம் விரைவில் அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59