"மரண தண்டணையை நீக்குவது தொடர்பான சட்டமூலம்  சபையில் சமர்பிப்பு" 

Published By: R. Kalaichelvan

01 Aug, 2019 | 04:20 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

மரண தண்டனையை முற்றாக நீக்குவது குறித்து  ஐக்கிய தேசிய கட்சியின்  எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் கொண்டுவரப்பட்ட தனிநபர் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

 

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதையடுத்து ஐ.தே .க.வின் காலி மாவட்ட எம்.பி.யான பந்துல லால் பண்டாரி கொடவினால் மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கான இச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

இச் சட்டமூலத்தை  தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி.யான மயில்வாகனம் திலகராஜ் வழி  மொழிந்தார். இச் சட்டமூலத்தின்படி ஏதாவது ஒரு சட்டத்தில் மரணதண்டனையை விதித்தல் அல்லது மரண தண்டனையால் தண்டனையளித்தல் என்று கூறப்பட்டிருப்பது இச் சட்டம் அமுலுக்கு வந்தவுடன் வாழ்நாள் சிறைத்தண்டனைமூலம் தண்டனையளித்தல் எனத் திருத்தப்படும் .

அத்துடன் இச் சட்டமூலம் அமுலுக்கு வருமுன்னர் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கும் எந்த நபரும் அக்குறித்த குற்றத்திற்காக வாழ் நாள் சிறைத்தண்டனை வழங்கப்படடவராகவே கருதப்படுவார்.

அதுமட்டுமன்றி  இச் சட்டமூலம் அமுலுக்கு வருமுன்னர் மரணதண்டனை வழங்கப்படக்கூடிய குற்றமொன்றை ஆளொருவர் புரிந்து அதற்கான தண்டனை நீதிமன்றத்தினால் இன்னும் வழங்கப்படாமலிருந்தால் அந்நபர் வாழ்நாள் சிறைத்தண்டனைக்குரிய குற்றமொன்றைப்புரிந்தவராகவே கருதப்படுவார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51