“ 50 ரூபா கொடுப்பனவில் இழுத்தடிப்பு வேண்டாம்”

Published By: Daya

01 Aug, 2019 | 03:29 PM
image

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாக இருக்கும்  பெருந்­தோட்டத்  தொழி­லா­ளர்­க­ளுக்­கான   மேல­திக கொடுப்­ப­ன­வான  50 ரூபாவை பெற்­றுக்­கொ­டுக்கும் முயற்­சியில்  தொடர்ந்தும் முரண்­பா­டான நிலைமை  நீடித்­து­வ­ரு­கின்­றது.   பல மாதங்­க­ளுக்கு முன்­னரே  இவ்­வாறு 50 ரூபா கொடுப்­ப­னவைப்  பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தற்கு முடி­வெ­டுத்­த­போதும்  இது­வரை அந்த விடயம் இழுத்­த­டிக்­கப்­பட்­டுக்­கொண்டே வரு­கின்­றது. 

இவ்­வ­ரு­டத்­துக்­கான வரவு செல­வுத்­திட்­டத்­திலும் இந்த  50 ரூபா விடயம் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. இந்­நி­லை­யி­லேயே   விசேட அமைச்­ச­ரவை பத்­திரம் மூலம்  இதனை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டது. பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 50 ரூபா கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுக்க 1200 மில்­லியன் ரூபா   தேவைப்­பட்ட நிலையில் பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சு 600 மில்­லியன் ரூபா­வையும்  திறை­சேரி  600  மில்­லியன் ரூபா­வையும் பெற்­றுக்­கொ­டுத்து  இந்த  கொடுப்­ப­னவை செலுத்தத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இவ்­வாறு தீர்­மா­னிக்­கப்­பட்ட போதிலும்  அதனை முன்­னெ­டுப்­பதில் தற்­போது பல தடைகள் காணப்­ப­டு­கின்­றன. 

இந்­நி­லையில் நேற்று முன்­தினம்  ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் அமைச்­ச­ரவை கூட்டம் நடை­பெற்­ற­போது தோட்டத் தொழி­லா­ள­ருக்­கான 50 ரூபா விசேட கொடுப்­ப­னவு தொடர்­பான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க  முன்­வைத்­தி­ருந்தார்.  50 ரூபா கொடுப் ­ப­ன­வுக்­கான  600 மில்­லியன் ரூபா நிதியைப் பெருந்­தோட்­டத்­துறை அமைச்­சுக்கு வழங்கும் வகை­யி­லேயே  இந்த அமைச்­ச­ரவைப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தது. 

எனினும் இவ்­வாறு அமைச்­ச­ரவை பத்­திரம் முன்­வைக்­கப்­பட்­ட போது கருத்து வெளி­யிட்ட பெருந்­தோட்டக் கைத்­தொழில் அமைச்சர் நவீன் திசா­நா­யக்க, பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான 50 ரூபா மேல­திக கொடுப்­ப­னவை வழங்­கு­வதை  நான் எதிர்க்­க­வில்லை. ஆனாலும்  இந்­த­க் கொ­டுப்­ப­னவை    அமைச்சர் திகாம்­ ப­ரத்தின் அமைச்­சுக்கு வழங்கி  அந்த அமைச்சின் மூல­மாக மிகு­தித்­தொ­கை­யையும்  செலுத்திக்  கொடுப்­ப­னவை பெற்­றுக் ­கொ­டுக்­க ­வேண்டும் என்று ஆலோ­சனை முன்­வைத்­தி­ருந்தார். .  இத­னை­ய­டுத்து அமைச்­ச­ர­வையில் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான   50 ரூபா கொடுப்­ப­னவு தொடர்பில் சர்ச்சை எழுந்­துள்­ளது. 

இதன்­போது  அவ்­வாறு  நிதியை உட­ன­டி­யாக தனது அமைச்சில் இருந்து வழங்­கு­வது சாத்­தி­ய­மற்­றது என்று தெரி­வித்­துள்ள  அமைச் சர் திகாம்­பரம் இது 50 ரூபா கொடுப்­ப­னவை இழுத்­த­டிக்கும் முயற்சி என குற்றம் சாட்­டி­யி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து, அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில்   கடும் வாதப் பிர­தி­வா­தங்கள் ஏற்­பட்­ட­தை­ய­டுத்து கூட்டம் முடியும் முன்­னரே அ­மைச்சர் திகாம்­பரம் அமைச்­ச­ர­வையிலிருந்து வெளி­யே­றி­யுள்ளார். மேல­திக கொடுப்­ப­னவு விட­யத்தில் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும். நாம்  எமது மக்­களை   இனியும்  ஏமாற்ற முடி­யாது என்று  கூறி­யுள்ள அமைச்சர் திகாம்­பரம்   இடை­ந­டுவில் அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லி­ருந்து வெளி­யே­றி­யுள்ளார். 

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்­கான 50 ரூபா  மேல­திக கொடுப்­ப­னவை வழங்­கு­வ­தற்கு பெருந்­தோட்ட அமைச்சு 600 மில்­லியன் ரூபாவை வழங்­கு­வது என்றும் திறை­சே­ரியில் இருந்து  600 மில்­லியன் ரூபா பெறு­வது என்றும் ஏற்­க­னவே தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யி­லேயே 600 மில்­லியன் ரூபாவை பெருந்­தோட்டத்துறை அமைச்­சுக்கு வழங்கும் வகையில் பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­ நேற்­று முன்தினம் அமைச்­ச­ரவைப் பத்­திரத்தைத் தாக்கல் செய்­திருந்தார். இந்­நி­லையில் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 50 ரூபா கொடுப்­ப­னவைப் பெற்­றுக்­கொ­டுக்கும் செயற்­பாடு கேள்­விக்­கு­றி­யாகி விட்­டதோ என்ற சந்­தேகம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 

பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­முறை கைச்­சாத்­தி­டப்­ப­டு­கின்ற கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடா­கவே சம்­பள உயர்வு வழங்­கப்­ப­டு­கின்­றது. இது தொடர்பில் மக் கள் மத்­தியில் பாரிய விமர்­ச­னங்கள் உள்­ளன. கிட்­டத்­தட்ட பல மாதங்­களின் பின்னர் இறு­தி­யாக கைச்­சாத்­தி­டப்­பட்ட கூட்டு ஒப்­பந்­தத்தின் ஊடாக பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு மொத்­த­மாக 750 ரூபா சம்­பளம் நிர்­ண­யிக்­கப்­பட்­டது. முத­லா­ளிமார் சம்­மே­ள­னத்­துக்கும் தொழிற்­சங்கப் பிர­தி­ நி­தி­க­ளுக்கும் இடை­யி­லான பல சுற்­றுப்­பேச்­சு­வார்த்­தை­களின் பின்­னரே இவ்­வாறு கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தி­டப்­பட்­டது. ஆனால் இந்தத் தொகைக்கு தொழி­லாளர் மத்­தி­யிலும் கடும் எதிர்ப்பு வெளிவந்­தது. குறிப்­பாக கூட்டு ஒப்­பந்­தத்தின் இந்த சம்­பளத் தொகையை எதிர்த்து தோட்டத் தொழி­லா­ளர்கள் எதிர்ப்புப் போராட்­டங்­களை நடத்தி வந்­தனர். தமக்கு நாள் சம்­ப­ள­மாக 1000 ரூபா வழங்­கப்­பட வேண்டும் என்­பதே பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் கோரிக்­கை­யாக இருந்­தது. பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் இந்தக் கோரிக்­கைக்கு பல்­வேறு தரப்­பி­னரும் ஆத­ரவு தெரி­வித்த போதிலும் முத­லா­ளிமார் சம்­மே­ளனம் இதற்கு இணங்­க­வில்லை. இந்த நிலை­யி­லேயே 750 ரூபா சம்­பள நிர்­ண­யத்­துடன் கூட்டு ஒப்­பந்தம் கைச்­சாத்­தா­னது.

 இது தொடர்பில் கடும் எதிர்ப்பு வெளியா­கி­யதை அடுத்து தமிழ் முற்­போக்குக் கூட்­டணி பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்­க­வையும் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்சர் நவீன் திஸா­நா­யக்­க­வையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­யது. அத­ன­டிப்­ப­டையில் 50 ரூபா மேல­திக கொடுப்­ப­னவை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு இணக்கம் காணப்­பட்­டது. எனினும் அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் தற்­போது பாரிய முரண்­பா­டுகள் தோற்­று­விக்­கப்­பட்டு வரு­கின்­றன. ஏற்­க­னவே ஏற்­ப­டுத்­தப்­பட்ட இணக்­கப்­பாட்டின் அடிப்­ப­டையில் பெருந்­தோட்ட கைத்­தொழில் அமைச்­சி­லி­ருந்து 600 மில்­லியன் ரூபா­வையும் திறை­சே­ரி­யி­லி­ருந்து 600 மில்­லியன் ரூபா­வையும் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்ற சூழ் ­நி­லை­யி­லேயே தற்­போது இந்தப் பிரச்­சி­னைகள் தோன்­றி­யுள்­ளன. அதா­வது மலை­யக புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்­சுக்கு 600 மில்­லியன் ரூபாவை வழங்­கு­வ­துடன் எஞ்­சிய தொகையை அவ­ரது அமைச்சின் ஊடா­கவே வழங்கும்  வகையில் ஏற்­பாட்டைச் செய்­யு­மாறு அமைச்சர் நவீன் திஸா­நா­யக்க அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் தெரி­வித்­தி­ருக்­கிறார். இத­னை­ய­டுத்தே தற்­போது சிக்கல் நிலை தோன்­றி­யுள்­ளது. மலை­யக தோட்டத் தொழி­லா­ளர்கள் இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் முது­கெ­லும்­பாக இருந்து வரு­கின்­றனர். 

நாட்டின் ஏற்­று­மதி  வரு­மா­னத்தில் கணி­ச­மான பங்­க­ளிப்பு பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளினால் வழங்­கப்­ப­டு­கி­றது. எனினும் அவர்­களின் சமூக மற்றும் பொரு­ளா­தார முன்­னேற்­ற­மா­னது பின்­தங்­கிய நிலை­யி­லேயே காணப்­ப­டு­கி­றது. வீட்டுப் பிரச்­சினை, சுகா­தார கல்விப் பிரச்­சினை, உட்­கட்­ட­மைப்பு வசதிப் பிரச்­சி­னைகள் என பல்­வேறு பிரச்­சி­னை­களை பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் எதிர்­கொண்டு வரு­கின்­றனர். அதில் அவர்­க­ளது சம்­பளப் பிரச்­சினை தொடர்ந்தும் பாரிய திண்­டாட்­ட­மா­கவே காணப்­ப­டு­கி­றது. 

ஒவ்­வொரு இரண்டு வரு­டங்­க­ளுக்கு ஒரு­மு­றையும்  பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்கள் பாரிய போராட்­டங்­களை முன்­னெ­டுத்து குறிப்­பி­டத்­தக்க சம்­பள உயர்வைப் பெற்­றுக்­கொள்­கின்­றனர். 

நாட்டின் பொரு­ளா­தா­ரத்தைத் தூக்கி நிறுத்­து­கின்ற பெருந்­தோட்டத்துறை மக்கள் இவ்­வாறு சம்­பள உயர்­வுக்­காக போரா­டிக் ­கொண்­டி­ருப்­பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும். அது­மட்­டு­மன்றி தற்­போது அர­சாங்­கத்­தினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருக்­கின்ற 50 ரூபா கொடுப்­ப­னவை வழங்­கு­வ­திலும் சிக்கல் நிலை தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது. இது மிகவும் கவ­லைக்­கு­ரிய விட­ய­ம். தினமும் பல்­வேறு பொரு­ளா­தார சவால்­க­ளுக்கு மத்­தியில் தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்­கையை கொண்டு நடத்­து­கின்­றனர்.  இந்தச் சூழலில் ஏற்­க­னவே உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட 50 ரூபா கொடுப்­ப­னவை பெற்றுக்கொடுக்காமல் இழுத்தடிப்பது கவலைக்குரியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04