இலங்கை விமானநிலையத்தில் கைதி போல நடத்தப்பட்டேன் - பாக்கிஸ்தான் சுற்றுலாப்பயணிக்கு நேர்ந்த அவலம்

Published By: Rajeeban

01 Aug, 2019 | 11:57 AM
image

பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுலாப்பயணியொருவர் உரிய ஆவணங்களை வைத்திருந்த போதிலும் இலங்கை அதிகாரிகள் தன்னை நாடு கடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பாக்கிஸ்தானை சேர்ந்த சுற்றுப்பயண வீடியோ புளொக்கரான ஹஸ்னைன் மன்சூர் என்பவரே முகநூலில் இலங்கையில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை பதிவு செய்துள்ளார்.

பாக்கிஸ்தானை சேர்ந்த 2000ற்கும் அதிகமானவர்கள் சுற்றுலாப்பயண விசாவில் இலங்கை வந்து அடைக்கலம் கோரியுள்ளனர் என தெரிவித்த இலங்கை அதிகாரிகள் தன்னை திருப்பியனுப்பினர் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் தன்னை மலேசியா செல்லும் விமானத்தில் அனுப்பபோவதாக தெரிவித்தனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தங்கியிருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்களது முடிவை மாற்றுவதற்கு தயாராகயிருக்கவில்லை என மன்சூர் தெரிவித்துள்ளார்

தன்னுடன் வேறு இரு குடும்பத்தையும் அதிகாரிகள் நாடு கடத்தியுள்ளனர் அந்த குடும்பங்களில் குழந்தைகள் சிறுவர்கள் காணப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நான் மலேசியாவிலிருந்து இலங்கை விமான நிலையம் சென்றடைந்தேன்  அங்கு குடிவரவு திணைக்கள அதிகாரியின் பகுதிக்கு சென்று எனது ஆவணங்களை சமர்ப்பித்தேன் அதன் பின்னர் குடிவரவு திணைக்களத்தின் பொறுப்பதிகாரியின் அறைக்கு வருமாறு என்னை அழைத்தனர் நான் அங்கு சென்றவேளை மேலும் இரு குடும்பங்கள் அங்கு காணப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

ஏன் என்னை அழைத்தீர்கள் என நான் கேட்டதற்கு அவர்கள் பதிலளிக்கவில்லை நான் இரண்டு மணித்தியாலங்களாக அங்கு இருந்தேன் மற்றைய இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்களும் என்னுடன் இரண்டு மணித்தியாலங்கள் அங்கிருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்

தன்னை நாடு கடத்துவதற்கான காரணத்தை கேட்டவேளை அதிகாரிகள் உறுதியான பதிலை வழங்கவில்லை என மன்சூர் தெரிவித்துள்ளார்.

என்னை பற்றி அவர்களிற்கு சந்தேகமுள்ளதாக குடிவரவு திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது போலியான காரணம் என குறிப்பிட்டுள்ள அவர் தனது விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கு உதவக்கூடிய தொலைக்காட்சியுடன் தன்னை தொடர்புபடுத்தி விடுமாறு மன்சூர் முகநூலில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த செய்தியை வாசிக்கும் ஒவ்வொரு பாக்கிஸ்தான் பிரஜையும் இந்த செய்தியை வேகமாக  பரப்பவேண்டும்,என தெரிவித்துள்ள ஹஸ்னைன் மன்சூர் பாக்கிஸ்தான் பிரதமரும் ஏனைய அதிகாரிகளும் இந்த விடயத்தில் உதவவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அங்கு காணப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் நான் மடிக்கணிணியில் என்ன செய்கின்றேன் என்பதை அடிக்கடி வந்து பார்த்துச்சென்றார் எங்களை சிறைக்கைதிகள் போல நடத்தினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தங்கியிருப்பதற்கான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தபோதிலும் அதிகாரிகள் தங்களது முடிவை மாற்றுவதற்கு தயாராகயிருக்கவில்லை என மன்சூர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து பாக்கிஸ்தானில் உள்ள இலங்கை தூதரகத்துடன் தொடர்புகொண்டவேளை எந்த அதிகாரியும் இது குறித்து கருத்து தெரிவிக்க முன்வரவில்லை என பாக்கிஸ்தான் டோவ்னின் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13