பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப் போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? ;வடிவேல் சுரேஷ் 

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 11:04 PM
image

(ஆர். யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அவசரகால சட்டத்தை பயன்படுத்தி பொலிஸார் பெரும்தோட்ட தமிழ் இளைஞர்களுடன் தேவையில்லாமல் உரசிப்பார்த்து வருகின்றனர். அதனால்   அவர்களையும்  ஆயுதம் தூக்க வைக்கக்கூடாது என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பெரும்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் சிலர் இனவாத ரீதியில் செயற்படுகின்றனர். எல்ல விளையாட்டு மைதானத்தில் எமது இளைஞர்கள் விளையாட எல்ல பொலிஸ் பொறுப்பதிகாரி தடை விதித்துள்ளார். இம்மைதானம் வெள்ளைக்காரர் காலம் முதல் உள்ளது. 5 தலைமுறைகளாக எமது இளைஞர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இப்போது அது தனியாருக்கு சொந்தமானதெனக்கூறி பொலிஸ் பொறுப்பதிகாரி அதில் எமது இளைஞர்கள் விளையாட தடையுத்தரவு பெற்றுள்ளார். 

தோட்டக் கம்பெனி முதலாளிமார்களுடன் சேர்ந்து விருந்துகளில் பங்கேற்கும் பொலிஸ் பொறுப்பதிகாரிகளே இவ்வாறான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கி போராடினார்கள். முஸ்லிம் இளைஞர்களும் ஆயுதம் தூக்கி விட்டார்கள். பெரும்தோட்ட இளைஞர்களும் ஆயுதம் தூக்கிப்போராட வேண்டுமென விரும்புகின்றீர்களா? என்று கேட்கின்றேன். எல்ல பொலிஸார் அவசரகால சட்டத்தை பயன்படுத்திக்கொண்டு எமது இளைஞர்களுடன் உரசிப்பார்க்க வேண்டாமென எச்சரிக்கின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15