மது அருந்துவதால் ஏற்படும் கணைய ரணத்திற்கான சிகிச்சை

Published By: Digital Desk 4

31 Jul, 2019 | 10:07 PM
image

இன்றைய திகதியில் எம்மில் பலரும் வார இறுதி நாட்களிலும், விருந்து மற்றும் விழாக்காலங்களிலும் மது அருந்துவதை வழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிலும் குறிப்பாக ஏ லெவல் மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மது அருந்துவதை வாடிக்கையாக  கொண்டிருக்கிறார்கள். 

மது அருந்துவதால் அவர்களின் கணையம் பாதிக்கப்படுகிறது. அங்கு Pancreatitis எனப்படும் கணைய ரணம் ஏற்படுகிறது.

வயிற்று வலி தான் இதன் அறிகுறியாக இருந்தாலும், சிலருக்கு வலி ஏற்படும் போது உட்கார்ந்த நிலையிலிருந்து முன்னோக்கி குனிவதால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது போல் உணர்வர். சிலருக்கு வலி வயிற்று பகுதியிலிருந்து பின் பக்க முதுகு வரை பரவும். சிலருக்கு கடுமையான வாந்தி ஏற்படும். இத்தகைய அறிகுறி ஏற்பட்டால் உங்களுக்கு Pancreatitis  எனப்படும் கணைய ரணம் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை உணரலாம்.

இத்தகைய வலியை உடனடியாக உணர்ந்து மருத்துவர்களை சந்தித்து, முறையான சிகிச்சையைப் பெறவேண்டும். ஏனெனில் கணையம் தான் உங்களின் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி கண்காணிக்கும் இன்சுலீன் என்னும் ஹோர்மோனை சுரக்கிறது. நீங்கள் மது அருந்துவதால் இந்த கணையம் பாதிக்கப்பட்டு, இன்சுலீன் சுரப்பில் தடை ஏற்பட்டால், அவர்களின் இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தப்படாமல், சர்க்கரை நோயாளிகளாக மாறுகிறார்கள். அதனால் நீங்கள் மது அருந்தினால் உங்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு என்பதை நினைவில் கொண்டு மதுவை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.

அதே தருணத்தில் மது அருந்துபவர்களுக்கு பித்தப்பையிலும் கற்கள் ஏற்பட்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதன் காரணமாகவும் கணையரணம் உண்டாகும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் சி டி ஸ்கேன் என்னும் பரிசோதனையை மேற்கொள்ள பரிந்துரைப்பார்கள். அத்துடன் அந்த சோதனையின் முடிவை Magnetic Resonance Cholangio Pancreatography என்ற வகையில் பெற்று, கணையத்தின் பாதிப்பை துல்லியமாக அறிந்து சிகிச்சையளிப்பார்கள். 

சிலர் இத்தகைய சிகிச்சையைப் பெற்ற பிறகு வேறு சில தவிர்க்க முடியாத காரணங்களால் மீண்டும் மது அருந்தினால் அவர்களுக்கு மீண்டும் கணைய ரணம் பாதிப்பு ஏற்படுவதுடன் Pseudocyst என்ற கணைய நீர்க்கட்டிகள் தோன்றக்கூடும். இதனை சத்திரசிகிச்சைகள் மூலமாகத்தான் அகற்ற இயலும். இந்த சத்திர சிகிச்சையையும் உரிய காலத்தில் மேற்கொள்ளாமல் புறகணித்தால் அந்த நீர்க்கட்டிகள் நாளடைவில் புற்றுநோய் கட்டியாக மாறக்கூடிய அபாயமும் உண்டு. 

எனவே கணையத்தை பாதிக்காமல் பாதுகாப்பாக வைத்திருக்கவேண்டும். அதையும் கடந்து கணைய ரண பாதிப்பிற்கு ஆளாகிவிட்டால் உரிய சிகிச்சையை மேற்கொண்டு, அதனை குணப்படுத்திக் கொள்ளவேண்டும்.இதற்கு காரணமாக மதுவை முற்றாக தவிர்க்கவேண்டும்.

டொக்டர் சபரீசன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04