சுதந்திரக் கட்சியில் இருந்­து­ கொண்டு கட்­சிக்கு எதி­ராக செயற்­ப­டு­கிறார் டிலான்  - தயா­சிறி எச்­ச­ரிக்கை 

Published By: Daya

31 Jul, 2019 | 02:51 PM
image

(எம்.மனோ­சித்ரா)


  ஜனா­தி­பதித் தேர்­தலில் கட்­சியைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பொது வேட்­பாளர் இல்­லாமல் தேசிய வேட்­பாளர் ஒரு­வரே நிய­மிக்­கப்­பட வேண்டும்.

அவர் அரச நிதியில் ஊழல் மோசடியில் ஈடு­ப­டா­த­வ­ரா­கவும், தேசிய சொத்­துக்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­கா­த­வ­ரா­கவும், சர்­வ­தே­சத்­தி­ட­மி­ருந்து நாட்டை பாது­காப்­ப­வ­ரா­கவும் இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச் செய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். 


சுதந்­திர கட்சி தலை­மை­

ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். 
அங்கு அவர் மேலும் தெரி­விக்­கையில்,

 


தற்­போது ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. எனினும் உத்­தேச ஜனா­தி­பதித் தேர்­தலில் தேசிய வேட்­பாளர் ஒருவர் கள­மி­றக்­கப்­பட வேண்டும் என்­பதே சுதந்­திர கட்­சியின் நிலைப்­பா­டாகும். ஆனால் பொது­ஜன பெர­மு­னவில் சிலர் இதனை ஏற்றுக்கொள்ளமாட்­டார்கள். அடுத்த பொதுத் தேர்­தலில் எவ்­வா­றேனும் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வா­கி­விட வேண்டும் என்று எதிர்­பார்ப்­ப­வர்­களே இவ்­வாறு செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றார்கள். 
டிலான் பெரேரா போன்­றோரே இவ்­வாறு செயற்­ப­டு­கி­றார்கள். அவர் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­ன­ராக இருக்­கின்ற போதிலும் பொது­ஜன பெர­முன சார்­பி­லேயே செயற்­ப­டு­கின்றார். சுதந்­திர கட்சி உறுப்­பி­ன­ராக இருக்க விரும்­பினால் அவர் எம்­முடன் ஒன்­றி­ணைந்து பய­ணிக்­கலாம்.

அல்­லது கட்­சி­யி­லி­ருந்து விலகி பொது ஜன பெர­மு­னவில் இணைந்து கொள்­ளலாம். மாறாக கட்­சியில் இருந்து கொண்டு அதற்கு எதி­ராக செயற்­பட்டால் ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க வேண்­டி­யேற்­படும். 


ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும், எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷ­வையும் விரைவில் சந்­தித்து கூட்­டணி தொடர்பில் தீர்க்­க­மான முடி­வொன்றை எடுக்­கு­மாறு கோரிக்கை விடுத்­துள்ளோம்.

ஆகஸ்ட் 11 ஆம் திகதி பொது ஜன பெர­மு­னவின் மாநாடு இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் இவர்கள் இரு­வரும் சந்­திப்­பார்கள் என்று எதிர்­பார்க்­கின்றோம். அந்த சந்­திப்பின் பின்னர் சுந்­திர கட்­சியின் மத்­திய குழு கூட்­டத்தில் தீர்­மா­ன­மொன்று எடுக்­கப்­படும். 


திங்­கட்­கி­ழமை வேலை­யில்லா பட்­ட­தா­ரிகள் பாரிய ஆர்ப்­பாட்­ட­மொன்றை முன்­னெ­டுத்­தி­ருந்­தனர். இன்று பல்­க­லைக்­க­ழகங்­களில் பட்டம் பெற்­ற­வர்கள்கூட வீதியில் இறங்கி தொழி­லுக்­காக போராட வேண்­டிய நிலை­மையை இந்த அர­சாங்கம் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

ஆனால் ஆர்ப்­பாட்­டக்­காரர்கள் ஜனா­தி­பதி செய­ல­கத்தை முற்­று­கை­யிட்­டதை ஏற்றுக்கொள்ள முடி­யாது. அவர்கள் அலரி மாளி­கைக்கே சென்­றி­ருக்க வேண்டும். எனினும் அந்த ஆர்ப்­பாட்­டத்தின் பின்­ன­ணியில் ஜே.வி.பி. இருந்­ததால் அவர்கள் ரணிலை பாது­காத்து ஜனா­தி­ப­திக்கு எதி­ராக திட்­ட­மிட்­டுள்­ளனர். 


தொழில் வாய்ப்­புக்­களில்  மாத்­தி­ர­மின்றி மாகாண சபைத் தேர்தல், புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திலும் அரசாங்கம் அனைவரையும் ஏமாற்றியுள்ளது. இவ்வளவு காலம் அரசாங்கத்தை பாதுகாத்த கூட்டமைப்பு மூன்று மாத காலத்தில் செய்வதற்கு சாத்தியமற்ற அரசியலமைப்பு பற்றி பேச ஆரம்பித்துள்ளது. இவை அனைத்துமே மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08