இணையத்தில் வைரலாகியுள்ள ஒரே பாலினத்தவர்களின் திருமண புகைப்படம்

Published By: Digital Desk 3

31 Jul, 2019 | 03:55 PM
image

ஒரே பாலினத்தைச் சேர்ந்த மணமகன்கள் இந்து முறைப்படி திருமணபந்தத்தில் இணைந்துள்ளார்கள்.

இந்திய பிரஜையான  நடன இயக்குனரும் நடன நிறுவனத்தின் தலைவருமான அமித் ஷா என்பவர் இடர் முகாமைத்துவம் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யா மதிராஜுவை மணந்துள்ளார்.

அவர்களது திருமண புகைப்படங்கள்  பார்ப்போரை பிரமிக்க வைத்த அதேவேளையில், இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஏனெனில் திருமண பந்தத்தில் இணைந்தவர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள். தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இவர்களின் திருமணம் முற்றிலும் இந்து முறைப்படி நடைபெற்றமையே ஆச்சரியம்.

அவர்கள் ஒரு இந்து கோவிலில் திருமணம் செய்து கொண்டனர் என்பது குறிப்பாக சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் பெரும்பாலும் ஒரே பாலின திருமணங்கள் அங்கு நடைபெறாது என்று ஆதித்யா கூறியுள்ளார். அவர்களது நண்பர்கள், பலர் ஓரின சேர்க்கை இந்திய தம்பதிகளுக்கு தங்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை அளித்துள்ளனர்  என்று இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளனர்.

பரஸ்பர நண்பரின் விருந்தில் சந்தித்த இவர்கள், 32 வயதான அமித் மற்றும் 31 வயதான ஆதித்யா ஆகியோர் இந்த மாத தொடக்கத்தில் ஒரு நகர மண்டபத்தில் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இந்துமுறைப்படி திருமணம்செய்து கொள்ள விரும்பினார்கள்.

‘ஒரு பாரம்பரிய திருமணத்தை நடத்துவது என்பது நம்மில் இருவருக்கும் சாதாரணமானதல்ல, நாங்கள் மிகவும் பாரம்பரியமான மற்றும் பழமைவாத பின்னணியிலிருந்து வந்தவர்கள்’ என்று இந்தியாவில் பிறந்து கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் ஆதித்யா கூறியுள்ளார்.

"எங்கள் சிறந்த புகைப்படக் கலைஞர்களான சார்மி பெனா மற்றும் பாலோ சலூட் ஆகியோரால் எடுக்கப்பட்ட புகைப்பட தருணங்கள் மிகவும் உண்மையானவை மற்றும் சிரமமின்றித் தோன்றுவதால் மக்கள் புகைப்படங்களை மிகவும் விரும்புகிறார்கள் என நாங்கள் நினைக்கிறோம்,"  ‘இது எங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய தருணம், புகைப்படங்கள் நம் உணர்வுகளை முழுமையாக்குகின்றன என தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஒரு இந்து கோவிலில் நடந்ததால் , இது போன்று ஒரே பாலின திருமணங்கள் உலகத்தில் பார்த்திருக்க முடியாது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13