“இலங்­கைக்­கான  இந்­திய வீட­மைப்­புத்­திட்டம் இலங்கை - இந்­திய நட்­பு­றவு திட்­ட­மாகும்”

Published By: Daya

31 Jul, 2019 | 01:56 PM
image

மத்­திய, ஊவா மாகா­ணங்­களில் குறிப்­பாக நுவ­ர­லியா, ஹட்டன் பகு­தியில் மாத்­தி­ரமே வீட­மைப்­புத்­திட்டம் இடம்­பெ­று­வ­தாக ஒரு சிந்­த­னைப்­போக்கு உண்டு. ஆனால், அது அவ்­வா­றில்லை. பெருந்­தோட்ட மக்கள் எங்­கெல்லாம் லயன் காம்­ப­ராக்­களில் வாழ்­கி­றார்­களோ அங்­கெல்லாம் நடை­மு­றைப்­ப­டுத்தும் வகையில் இந்­திய வீட­மைப்புத் திட்டம் செயற்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. மலை­ய­கத்­திலும் வேறு பகு­தி­க­ளி­லு­மாக முன்­னெ­டுக்­கப்­படும் இலங்­கைக்­கான  இந்­திய வீட­மைப்புத் திட்­டங்கள் இலங்கை–இந்­திய நட்­பு­றவு திட்­ட­மாக அமை­கி­றது என இலங்­கைக்­கான உயர்ஸ்­தா­னி­க­ர­கத்தின் கவுன்­சி­லரும் வீட­மைப்­புத்­திட்ட பொறுப்ப­தி­கா­ரி­யு­ம் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ் தாகனிருமான மஞ்­சுநாத் தெரி­வித்­துள்ளார்.

மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சின் ஏற்­பாட்டில் ஒழுங்கு செய்­யப்­பட்ட இந்­திய வீட­மைப்புத் திட்­டத்தின் 50 வீடு­களைக்கொண்ட வீடு­க­ளுக்­கான அடிக்­கல்­ நாட்டு விழா காலி மாவட்டம் தல­கஸ்­வல தோட்­டத்தில் கடந்த சனிக்கிழமை இடம்­பெற்­றது. காணி மற்றும் பாரா­ளு­மன்ற மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தலை­மையில் இடம்­பெற்ற இந்த விழாவில் முன்னாள் அமைச்­ச­ரு­ம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பிய­சேன கமகே, நுவ­ரெ­லியா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம். தில­கராஜ்  ஆகியோர் சிறப்பு அதி­தி­களாக கலந்துகொண்­டி­ருந்தார். 

இந்த நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும்போதே மஞ்­சுநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மத்­திய ஊவா மாகா­ணங்­களில் குறிப்­பாக நுவ­ரெ­லியா, அட்டன் பகு­தியில் மாத்­தி­ரமே இந்­திய வீட­மைப்புத் திட்டம் இடம்­பெ­று­வ­தாக ஒரு சிந்­த­னைப்­போக்கு உண்டு. அது அவ்­வா­றில்லை என்­பதை பறை­சாற்றும் நிகழ்வே இன்று காலி மாவட்­டத்தில் காணி அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்கவின் வேண்­டு­கோளின் பேரில் தல்­கஸ்­வல தோட்­டத்தில் ஆரம்­பிக்­கப்­படும் வீட்­டுத்­திட்­ட­மாகும். 

இதற்கு முன்­னரும் மாத்­தறை மாவட்­டத்தின் ஹலந்­தாவை, தெணி­யாய தோட்­டங்­க­ளிலும் தென் மாகா­ணத்தில் இந்­திய வீட­மைப்பு திட்­டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதே­போல நுவ­ர­லியா, பதுளை, கண்டி, மாத்­தளை, மொன­ரா­கலை போன்ற மாவட்­டங்­களில் ஏற்­கனெவே பல வீட­மைப்பு திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. விரைவில் கேகாலை, இரத்­தி­ன­புரி மாவட்­டங்­களில் இந்­திய வீட­மைப்புத் திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. 

இந்­திய வீட­மைப்­புத்­திட்­டத்தின் முதல் கட்­ட­மாக 4ஆயிரம் வீடு­களில் 1600 வீடுகள் மக்கள் பாவ­னைக்கு கைய­ளிக்­கப்­பட்­டு­விட்­டன. பிர­தமர் மோடி மேல­தி­க­மாக வழங்­கிய 10ஆயிரம் வீட்­டுத்­திட்ட  பணி­களை விரைவில் ஆரம்­பிக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இதன் முதல் கட்­ட­மாக 5000 வீடு­களை அமைப்­ப­தற்­கான தோட்­டங்கள் சகல பெருந்­தோட்ட மாவட்­டங்­களில் இருந்தும் தெரிவு செய்­யப்­பட்டு பெருந்­தோட்ட மனித வள அபி­வி­ருத்தி நிறு­வ­னத்தின் ஊடாக காணிகள் அடை­யாளம் காணும் பணிகள் இடம்பெற்று வரு­கின்­றன. 

இந்­திய அர­சாங்­கத்தின் நிதி உத­வி­யினால் முன்­னெ­டுக்­கப்­படும் இந்த வீட்­டுத்­திட்­டத்­திற்கு  இலங்கை அர­சாங்­கத்­தினால்  காணி அமைச்­சினால் காணிகள் வழங்­கப்­ப­டு­கின்­றன. அதே­போல குடிநீர், மின்­சாரம், பாதைகள் முத­லான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை அமைச்சர் பழனி திகாம்­பரம் தலை­மை­யி­லான மலை­நாட்டு புதிய கிரா­மங்கள் உட்­கட்­ட­மைப்பு வச­திகள் சமு­தாய அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடாக வழங்­கப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய இணைந்த செயற்­பா­டு­களால் இதனை இலங்கை–இந்­திய வீட­மைப்பு திட்டம் என்­பதே பொருத்­த­மா­னது. 

இது உண்­மையில் இந்­திய வீட­மை ப்பு திட்டம் என்­பதைவிட மக்­க­ளா­கிய உங்­களின் வீட­மைப்புத் திட்டம் ஆகும். நீங்கள்தான் இறுதி பய­னா­ளிகள். வீடு­களை அமைப்பதற்கு உங்களுக்கு ஆலோசனை வழங்க செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகள் நியமிக்கப்பட்டி ருக்கின்றார்கள். பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனம் உதவி செய்கிறது. இந்த எல்லா உதவிகளையும் இணைத்து உங்களுக்கான வீட்டை நீங்கள் முறையாக அமைத்துக்கொள்ள வேண்டும். வீடமைப்பு மாத்திரமன்றி வேறு முடியுமான எல்லா வழிமுறைகளிலும் இந்தியா உங்களுக்கு உதவி வழங்க தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06