வீரகேசரியின் விவரணக் கட்டுரைக்கு அமெரிக்க பல்கலையில் அங்கீகாரம் : சார்க் நாடுகளின் கட்டுரைகளில்  முதலாமிடம்

Published By: Daya

01 Aug, 2019 | 10:30 AM
image

 "தெற்­கா­சியா பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வதால் கிடைக்கும்  நன்­மைகள்" என்ற தொனிப்­பொ­ருளில் அரி­சோனா  பல்­க­லைக்­க­ழகத்தின்  டொனால்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊட­க­வியல் பிரி­வினால்  நடத்­தப்­பட்ட விவ­ரணக் கட்­டுரை போட்­டியில் வீர­கே­சரி நாளி­தழில் அதன் செய்­தி­யா­சி­ரியர்  ரொபட் அன்­டனி எழு­திய  கட்­டுரை முதலாம் இடத்தை பெற்­றுக்­கொண்­டுள்­ளது. 


அரி­சோனா பல்­க­லைக்­க­ழ­கத்தின் டொனா ல்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊட­க­வியல் பிரிவு அண்­மையில் தெற்­கா­சிய நாடு­களின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான  மாநாடு ஒன்றை  டுபாயில் நடத்­தி­யது. 
அதில்  இந்­தியா, இலங்கை,  பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ், நேபாளம்,  ஆப்­கா­னிஸ்தான்  நாடு­களைச் சேர்ந்த 60 இற்கும் மேற்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள்  கலந்­து­கொண்­டனர். 


கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையிலிருந்து ஊடகவியலாளர்களை தெரிவு செய்து இந்த மாநாட்டுக்கு அனுப்பியிருந்தது.


இந்த மாநாட்டில் தெற்­கா­சிய பிராந்­தியம் பொரு­ளா­தார ரீதியில் ஒன்­றி­ணை­வதால் மக்­க­ளுக்கு கிடைக்கும் நன்­மைகள் குறித்து விரி­வாக ஆரா­யப்­பட்­டது. மாநாட்­டுக்கு பின்­னரே   குறித்த  விவ­ரணக் கட்­டுரை போட்டி நடத்­தப்­பட்­டது.

தெற்­கா­சிய பிராந்­தியம்  பொரு­ளா­தார ரீதியில்  கூட்­டி­ணை­வது எந்­த­ளவு தூரம் முக்­கியம் என்­பது தொனிப்­பொ­ரு­ளாக இருக்­க­வேண்டும் என்று அறி­விக்­கப்­பட்­டது.


அதன்­படி  வீர­கே­சரி  நாளிதழ் சார்­பாக  குறித்த டுபாய் மாநாட்டில் பங்­கேற்ற அதன் செய்­தியா­சி­ரியர் ரொபட் அன்­டனி "சார்க் பிராந்­தி­யத்தில் வறுமை, வேலை­யின்மை, பதற்­றத்தை தடுக்க பொரு­ளா­தார ரீதியில் கூட்­டி­ணை­வது அவ­சியம்"   என்ற தலைப்பில் எழு­திய விவ­ரணக்  கட்­டு­ரைக்கு முதலாம் இடம் கிடைத்­துள்­ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் மற்றும் சிறந்த மாநாட்டு அறிக்­கை­யிடல் குறித்த நிலைகள் ஏனைய சார்க் நாடு­களின் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு  கிடைத்துள்­ளன. 


அரி­சோனா பல்­க­லைக்­க­ழ­கத்தின் டொனா ல்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊட­க­வியல் பிரி­வினால் நிய­மிக்­கப்­பட்ட நடுவர் குழு­வினால் விவ­ரணக் கட்­டு­ரைகள்  மதிப்­பி­டப்­பட்டு இந்த தெரி­வுகள்  இடம்­பெற்­றுள்­ளன.

  
கட்­டுரைப்  போட்டி  தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்வ முடி­வுகள் அரி­சோனா பல்­க­லைக்­க­ழ­கத்தின் டொனால்ட் டபிள்யூ. ரெய்னோல்ட்ஸ் ஊட­க­வியல் பிரிவின் இணை­ய­த­ளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. https://businessjournalism.org/2019/07/reynolds-announces-winners-of-south-asia-economic-integration-journalism-contest/ என்ற இணை­யத்­தள முக­வ­ரியில் போட்டி  முடி­வு­களை பார்­வை­யி­டலாம்.



முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14