2018 இல் யுத்தத்தால் இறந்த குழந்தைகளின் எண்ணிகை எவ்வளவு தெரியுமா ? ஐ.நா. அறிக்கையில் தகவல் வெளியானது !

Published By: Priyatharshan

31 Jul, 2019 | 12:28 PM
image

கடந்த 2018 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் இடம்பெற்ற போர் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அந்நாட்டு அரசாங்கத்திற்கும்  கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக யுத்தம் இடம்பெற்று வருகின்றது.

இதேபோல் பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையே காசா எல்லையில் நடைபெறும் மோதல்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

மேலும் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 18 வருடங்களாக யுத்தம் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இத்தகைய நாடுகளில், கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் மற்றும் உள்நாட்டு கலவரங்களில் சிக்கி உயிரிழந்த குழந்தைகள் பற்றி ஐ.நா. ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்திரம் சிரியா, ஏமன், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, 2018 ஆம் ஆண்டில் மாத்திரம் 933 சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் பதிவாகியுள்ளன.

இந்த கால கட்டத்தில் கடத்தல், கிளர்ச்சியாளர்களாக பயன்படுத்தப்படுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பாடசாலை , வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்கள் என பல்வேறு வன்முறைகள் குழந்தைகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17