அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை கூட்டமைப்பு ஆதரிக்காது ! - சுமந்திரன்

Published By: Daya

31 Jul, 2019 | 10:04 AM
image

கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க வேண்டும் ? இருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

"பாராளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்படும், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மான வரைவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்காது.

2015ஆம் ஆண்டு இதேபோன்றதொரு வரைவு முன்வைக்கப்பட்டபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாக அதனை எதிர்த்தது. தற்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்."

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

"கூட்டு அரசு அமைக்கப்பட்ட பின்னர் 2015ஆம் ஆண்டு இதே தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதனை எதிர்த்தது. நாம் கொள்கை ரீதியான நிலைப்பாட்டின் அடிப்படையில் எதிர்த்தோம். 

கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சரவையை அதிகரிக்க வேண்டும்? இருக்கின்ற அமைச்சுக்களைப் பகிர்ந்து கொள்ளலாம். 

அமைச்சராகித்தான் கூட்டு அரசை ஆதரிக்கவேண்டும் என்று இல்லையே. நாங்களும், மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசின் சில விடயங்களுக்கு ஆதரவு வழங்குகின்றோம். 

2015ஆம் ஆண்டு நாங்கள் எடுத்த தீர்மானத்திலிருந்து மாறவேண்டிய தேவை இல்லை என்று நினைக்கின்றேன்" - என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31