உணவு விஷமடைந்ததன் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீட மாணவர்கள் 20 பேர்  அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக விடுதியில் நேற்றிரவு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் பின்னரே மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனமுற்ற மாணவர்கள் முதலில் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.