5000 மைல் சென்று சூரிய கிரகணத்தை புகைப்படமெடுத்த பத்திரிகையாளர் 

Published By: Digital Desk 4

30 Jul, 2019 | 07:50 PM
image

அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர், 5 ஆயிரம் மைல் கடந்து சென்று சூரிய கிரகணத்தைப் படம் பிடித்துள்ள சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு  பிசி மேகசின் (PC Magazine) என்ற இணையத்தள  நிறுவனம் செயற்பட்டு வருகிறது. குறித்த நிறுவனம் தனது ணையத்தளத்த்தில் மடிகணணி, ஸ்மார்ட்தொலைபேசிகள், டிவி, மென்பொருள் போன்ற தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. 

இந்த நிறுவனத்தின் புகைப்படக் கலைஞராக பணியாற்றி வரும் டானி ஹாஃப்மென். என்பவர், இயற்கை தொழிற்நுட்பம் தொடர்பான புகைப்படங்களை, களத்திற்கே நேரடியாகச் சென்று பதிவுசெய்வது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2 ஆம் திகதி ஏற்பட்ட சூரிய கிரகணத்தை, அது மிகத் துல்லியமாகத் தெரியும் வடமேற்கு அர்ஜன்டினா பகுதிக்கு சென்று பதிவுசெய்ய விரும்பினார். இதையடுத்து, நியூயோர்க்கிலிருந்து 5 ஆயிரம் மைல் தொலைவில் உள்ள வடமேற்கு அர்ஜன்டினாவுக்கு தனது குழுவினருடன் புறப்பட்டார்.

போகும் வழியில் இருந்த காடுகள், மலைகள் போன்ற இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், அரியவகை வனவிலங்குகள், பறவையினங்கள் மக்களின் கலாச்சாரம் என கண்ணில் கண்ட அனைத்தையும் தனது கெமராவுக்குள் சிறைப்பிடித்தார்.

இதையடுத்து, அர்ஜன்டினாவில் உள்ள சன் ஜூவான் என்ற நகரைக் கடந்து சென்று, சூரிய கிரகணம் துல்லியமாகத் தெரியும் இடத்தை தேர்வுசெய்து கிரகணம் தொடங்குவதற்காக அங்கு காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, சூரியனை நோக்கி நிலவு மெல்ல வந்தது. தொடக்கத்தில், அரை சூரிய கிரகணம் தோன்றியது. சரியாக 15 நிமிடங்களில் முழு சூரிய கிரகணம் ஏற்பட ஆரம்பித்தது.

இதைப் பார்த்து பரவசமடைந்த பத்திரிகையாளர் டானி, தன்னிடமிருந்த சோனி DSC-RX1000 II என்ற கெமரா மூலம் தொலைவில் இருந்தபடியே ஒரு புகைப்படம், சூம் செய்து ஒரு புகைப்படம் என வெவ்வேறு கோணங்களில் சூரிய கிரகணத்தை புகைப்படமெடுத்தார். 

மேலும், ஐபோன் 7 ப்ளஸ் ஸ்மார்ட் தொலைபேசியில் சூரிய கிரகணத்தையும், அவர் இருந்த பகுதிக்கு அருகில் இருந்த மலைத்தொடரையும் ஒரு சேர பனோரமா புகைப்படம் எடுத்தார். 

அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் மற்றும் சென்று வந்த பயணக் கட்டுரை பிசி மேகசின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சூரிய கிரகணத்தைப் படம் பிடிக்க, புகைப்படக் கலைஞர் ஒருவர் 5 ஆயிரம் மைல் சென்ற சம்பவம், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08
news-image

பரப்புரைக்காக தமிழ்நாடு சென்ற ராகுல் காந்தி...

2024-04-15 13:08:34
news-image

நான் பொலிஸ் உத்தியோகத்தராக இருந்திருந்தால் எனது...

2024-04-15 12:53:59
news-image

தற்பாதுகாப்பு மற்றும் தாக்குதல் திட்டங்களிற்கு இஸ்ரேலிய...

2024-04-15 11:44:59