கீழ்ப்பக்க முதுகுவலி குறைவதற்கான உடற்பயிற்சி

Published By: Digital Desk 4

30 Jul, 2019 | 06:59 PM
image

இன்றைய திகதியில் நாளாந்தம் 80 கிலோ மீற்றர் தொலைவிற்கு துவிச்சக்கர வண்டியில் பயணித்து, அலுவலகத்திற்கு சென்று, 8 மணி நேரம் பணியாற்றி விட்டு, மீண்டும் இல்லம் திரும்புபவர்கள் அதிகம். இவர்களில் பெரும்பாலானவர்கள் கீழ்ப்பக்க முதுகுவலிக்கு ஆளாகுவார்கள்.

இவர்களில் பலருக்கு மருத்துவ பரிசோதனையில் disc prolapse எனப்படும் தண்டுவடப் பகுதியில் l4, l5 ஆகிய தண்டுவடத்தில் ஏற்படும் நரம்பு அழுத்தம் காரணமாக வலி ஏற்படுகிறது என்பது தெரியவரும். இத்தகைய வலி முதுகில் தொடங்கி கணுக்கால் வரையிலும் நீடித்திருக்கும். 

பலர் வலியால் துடிப்பர். இதன்போது இவர்களின் உடனடி தெரிவு வலிநிவாரணி மாத்திரைகளே. ஆனால் மருத்துவர்கள் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும், பிஸியோதெரபி எனப்படும் உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும் என்று பரிந்துரைப்பர்.

இந்நிலையில் இயன்முறை மருத்துவர்கள் எம்முடைய இல்லத்திற்கு வருகை தந்து, பயிற்சிகளை செய்ய வலியுறுத்துவார்கள். அந்த வகையில் நான்கு மணித்தியாலத்திற்கு ஒரு முறை குப்புற கவிழ்ந்து படுக்க வேண்டும் என்றும், அந்த நிலையில் 15 முதல் 20 நிமிடம் படுத்துறங்க வேண்டும் என்றும் முதல் பயிற்சியாக எடுத்துரைப்பார்கள். 

இதனைத் தொடர்ந்து குப்புற கவிழ்ந்த நிலையில் படுத்துக் கொண்டே, நெஞ்சக பகுதியில் இரண்டு தலையணைகள் வைத்து உறங்க வேண்டும் என்று எடுத்துரைப்பார்கள். இந்தப் பயிற்சி காலையில் ஒரு முறையும், மாலையில் ஒரு முறையும் மேற்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைப்பார்கள். இந்த பயிற்சியின் கால அளவும் 15 நிமிடத்தில் 20 நிமிடங்களே. இதனைத் தொடர்ந்து குப்புற கவிழ்ந்து படுத்திருக்கும் நிலையில், உங்களது வலது மற்றும் இடது கைகளை தரையுடன் அல்லது படுக்கையுடன் நன்றாக அழுந்தி இருக்குமாறு வைத்துக்கொண்டு, உங்களது மார்பு பகுதியை மட்டும் எந்த அளவுக்கு தரையிலிருந்து அல்லது படுக்கையிலிருந்து தூக்க இயலுமோ அந்த அளவிற்கு தூக்க வேண்டும். 

மூன்று வினாடிகள் பிறகு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி விட வேண்டும். இந்த மூன்றும் பயிற்சிகளையும் செய்து வந்தால், உங்களது கணுக்கால் பகுதியில் இருந்த வலி அனைத்தும் தண்டுவடப் பகுதியில் நிலைபெறும். அதாவது வலி ஒரு மையப் பகுதிக்குள் குவிந்துவிடும். அதன் பிறகு வலி குறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். இதன் பிறகும் கட்டாய ஓய்வும், இயன்முறை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சியையும் தொடர்ந்தால், முதுகு வலி குறைய தொடங்கும்.

டொக்டர் செந்தில்குமார்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04