வீடியோ கேம் விளையாடில்  மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசு வென்ற சிறுவன்! 

Published By: Digital Desk 3

30 Jul, 2019 | 05:20 PM
image

சிறுவர்கள் இப்போது வீடியோ கேம் விளையாட்டுகளில் மிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள். சிறுவர்களிடம் உடல்,உள ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தம் இவ் விளையாட்டு  தொடர்பில் பெற்றோர் எதிர்ப்பு வெளியிட்டப்போதும் இவ் விளையாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்கள் சிறுவர்களை ஈர்ப்பதற்கு பல உக்திகளை கையாழுகின்றன. 

இணையதளத்தை அடிப்படையாக கொண்ட விளையாட்டுத் துறையின் மதிப்பு ஒரு பில்லியன் டொலர்களை எட்டும் நிலையில் மின்னணு விளையாட்டு வரலாற்றில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக மூன்று மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடைபெற்ற 'ஃபார்ச்சூன்' எனும் கணினி விளையாட்டில்  தனிநபர் பிரிவில் வெற்றிபெற்ற 16 வயதான கைல் கியர்ஸ்டோர்ஃப் எனும் சிறுவனுக்குதான் இந்த அதிகபட்ச பரிசுத்தொகை அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவில் இந்த தொகை 51கோடிக்கும் அதிகமானது. 

இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு மொத்தமாக முப்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முதல் பரிசினைபெற்ற  கைல்  "நான் வென்றுள்ள பரிசுத்தொகையின் பெரும்பகுதியை சேமிக்க விரும்புகிறேன். பிறகு, எனது வெற்றிக்கிண்ணத்தை  வைப்பதற்கு ஒரு மேசையை வாங்க விரும்புகிறேன்" என்று தமது உணர்வை பகிர்ந்துள்ளார்.

அதே போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த லண்டனை சேர்ந்த 15 வயதான ஜாடென் அஷ்மான் எனும் சிறுவனுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியின் தகுதிச் சுற்று உலகளாவிய ரீதியில் பத்து வாரங்களாக இணையதளத்தில் நடைபெற்றுள்ளது. இதில்  சுமார் நான்கு கோடி பேர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விளையாட்டை பொறுத்தவரை, இணையத்தில் வரைகலை மூலம் உருவாக்கப்படும் 100 வீரர்கள் ஒரு தீவில் இறக்கிவிடப்படுவார்கள். பின்பு, அங்கு கிடைக்கும் ஆயுதங்கள் மற்றும் கட்டமைப்புகளை பயன்படுத்தி சண்டையிட்டு மற்றவர்களை வீழ்த்த வேண்டும். கடைசிவரை தாக்குப்பிடிக்கும் ஒருவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

இலவசமாக திறன்பேசிகளில் கிடைக்கும் இந்த விளையாட்டை இதுவரை 20 கோடி பேர் முறையாக பதிவு செய்து விளையாடியுள்ளனர்.

ஆனால், இந்த மிகப் பெரிய பரிசுத்தொகையை தோற்கடிக்கும் மற்றொரு போட்டியான 'தி போர்நைட்'  ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும்  சுமார் 100 வீரர்கள் கலந்துகொள்ள உள்ளனர். 

இதுபோன்ற இணையம் சார்ந்த விளையாட்டுகளில் விளையாடுவோரின் வயது சரிவர கண்காணிக்கப்படுவதில்லை இதனால் சிறுவர்கள் அதிகமாக இவ் விளையாட்டிற்கு அடிமையாகிவிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26