நவீன மாற்றங்களை ஈடுசெய்துகொள்ள தபால் சேவையிலும்  புதிய  நடைமுறைகள்  

Published By: R. Kalaichelvan

30 Jul, 2019 | 04:52 PM
image

(ஆர்.விதுஷா)

தகவல் பரிமாற்றங்கள் மற்றும் தொடர்பாடகளில் ஏற்பட்டிருக்கும்  நவீன  மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் தபால்  திணைக்களத்தின் சேவைகளையும்  நவீனமயப்படுத்துவதற்கென திட்டங்கள் பலவற்றை முன்னெடுக்கவுள்ளதாக தபால்மாஅதிபர்  ரஞ்சித் ஆரியரத்ன  தெரிவித்தார்.

தபால்  திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும்  நவீன மாற்றங்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில்  இன்று ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு விளக்கமளித்த அவர் அங்கு கூறியதாவது,  

தபால் திணைக்களம் என்பது அரசாங்க திணைக்களங்களில் மிகவும் பழமை வாய்ந்து 326 வருடகால வரலாற்றை கொண்ட  திணைக்களமாகும். அண்மைய நவீன மாற்றங்களின் விளைவாக தபால் திணைக்களம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது.  

ஆகவே,இந்த திணைக்களத்தை மூடுவது தொடர்பிலும் ; பேசப்படுகின்றது. இருப்பினும் தபால் திணைக்களத்தினூடாக வழங்ப்படும் சேவைகள் குறித்து மக்களும் அறிந்து கொள்ளவேண்டியது அவசியமாகும். 

ஏனெனில நவீன மாற்றத்திற்கு இணங்க தபால் திணைக்களத்திலும் பாரிய  மாற்றங்கள் ஏற்படத்தப்பட்டுள்ளன. இந்த  செவைக்காக  குறைந்த  கட்டணமே  அறவிடப்படுகின்றது.  

நாட்டில்  உள்நாட்டு மற்றும் சர்வதேச மட்டத்திலான தபால் பரிமாற்றம்  நாளொன்றிற்கு  1.3 மில்லியன் வரையில்  இடம்  பெறுகின்றது. அந்த  வகையில்   653  பிரதான தபால்   நிலையங்களும்     3610  உப  தபால் நிலையங்களுயும்  நாடு  பூராகவும்  இயங்கி  வருகின்றன.  அதேபோல் தனியாரால் நடத்தப்படும்  உப தபால் நிலையங்கள்   340  வரையில்    தமது  சேவையினை வழங்கி  வருகினறன.     

நவீன மாற்றத்திற்கு ஈடு கொடுக்கும் வகையில் நட்டத்தில் இயங்கம் தபால் திணைக்களத்தை  வளர்ச்சி பாதையில் இட்டு  செல்லும்  வகையில்  பல  நவீன முறைமைகள்  மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37