நிதி கொள்கை  சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து  மத்திய வங்கியை பலவீனப்படுத்த  இடமளிக்க முடியாது : பந்துல 

Published By: R. Kalaichelvan

30 Jul, 2019 | 02:38 PM
image

(இராஜதுரை ஹஷான்)

நிதி கொள்கை  சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வந்து  மத்திய வங்கியினை  பலவீனப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது ஜனாதிபதியின்  அறிவுறுத்தல்களுக்கு அப்பாற்பட்டு திருத்தச்சட்டம் தொடர்பில் பிரேரணை  பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டால்  அதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தினை நாடுவேன் என  பாராளுமுன்ற உறுப்பினர்   பந்துல குணவர்தன தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம்  புதிய  சட்டங்களை உருவாக்கியும், நடைமுறை  சட்டங்களில்  சீர்த்திருத்தங்களை கொண்டு வந்தும்  தேசிய  நிதியினை மோசடி செய்துள்ளது . 

1953ம்  இலக்க மத்திய வங்கியின் பிணைமுறை  ஒழுங்குப்படுத்தல் முறைமையில் பாரம்பரியமாக பின்பற்றி வந்த விடயங்களை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமக்கு  ஏற்ற  விதத்தில் மாற்றியமைத்தார். இதுவே  பிணைமுறி மோசடியினை தொடர்ந்து இரு தடவைகள்  மேற்கொள்வதற்கு இலகுவான காரணியாக அமைந்தது.

நாட்டுக்குள் பயங்கரவாத செயற்பாடுகளுக்கும்,  சட்ட விரோதமான செயற்பாடுகளுக்கும்  பிற நாடுகளில் இருந்து வரும்  நிதியினை   கட்டுப்படுத்த முடியாத  நிலைமை இந்த  திருத்தத்தின் ஊடாக  தற்போது ஏற்பட்டுள்ளதாக  மத்திய வங்கியின்  உயர் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது. இந்நிலைமை தொடர்ந்து நீடித்தால்  நாடு பாரிய  விளைவுகளை எதிர்க் கொள்ள நேரிடும் என அவர் இதன் போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33