இந்திய மீனவர்களை பார்வையிட சிறைச்சாலைக்குச் சென்ற அனந்தி

Published By: Daya

30 Jul, 2019 | 03:07 PM
image

வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஏழு பேரை சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்தவதற்காகவும், ஆறுதல் தெரிவிப்பதற்காகவும்  இன்று மதியம் வவுனியா சிறைச்சாலைக்கு முன்னாள் வடமாகாண சபை அமைச்சர் அனந்திசசிதரன் சென்றுள்ளார்.


இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்கள் ஏழுபேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தியுள்ளனர். 


இதையடுத்து வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏழு மீனவர்களையும் நேரில் சென்று சந்தித்து அவர்களின் விடுதலையை துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதற்காக இன்று வவுனியா சிறைச்சாலைக்குச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.


மேலும் கடந்த (27.07) அதிகாலை தொழில் நிமித்தம் கடலுக்குச் சென்ற இந்திய மீனவர்களின் படகில் டீசல் இல்லாத காரணத்தினால் தரித்து நின்ற படகை இலங்கை கடற்படையினால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு  நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக் கப்பட்டுள்ளன.

குறித்த  ஏழு மீனவர்களையும் பார்வையிடுவதற்காகவும் மதுரையிலுள்ள பிரபல்யமான சட்டத்தரணி தீரன் திருமுருகனின் வேண்டுதலுக்கு அமைய நேரில் சென்று பார்வையிடுவதற்காக சென்றுள்ளதாகவும் டீசலை வழங்கி இலங்கை கடற்படையினர் தங்களை திரும்பி அனுப்பியிருப்பார்கள் என்று கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் நம்பியிருந்தவர்களை இவ்வாறு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது குடுபத்தினருக்கு இத்தகவல்களை வழங்குவதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதுவர் பாலச்சந்திரனுடனும் கதைத்துள்ளதாகவும் இவர்களின் விடுதலை தொடர்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது..இந்நிலையில், மிக விரைவில் நாடு திரும்பவுள்ளதாக நம்புவதாகவும் அவர்களுக்கு ஆறுதல்களையும் தெரிவித்து வந்துள்ளதாக மீனவர்களைப் பார்வையிட்டுள்ள அனந்தி சசிதரன் ஊடகங்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02