குண்டுதாரி சஹ்ரானின் மகள் குறித்து முக்கிய கோரிக்கையொன்றை விடுத்துள்ள நீதிமன்றம்

Published By: J.G.Stephan

30 Jul, 2019 | 12:11 PM
image

கடந்த ஏப்ரல் மாத உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாட்டில் ஏற்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில், பிரதான குண்டுதாரியான சஹ்ரானின் மகளை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்திய மொஹம்மட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் என்பவர் 20 இலட்சம் ரூபாவை அனுப்பியதாகக் கூறப்படும் பம்பலப்பிட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றின் கணக்குத் தொடர்பான அறிக்கையை அனுப்புமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கை சம்பந்தமான அறிக்கையை இரகசியப் பொலிஸாருக்கு அனுப்புமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் நீதவான் ரங்க திசாநாயக்க குறிப்பிட்ட வங்கிக்கு உத்தரவிட்டுள்ளார்.

குண்டுதாரி இந்தப் பணத்தை எம்.முபாஹில் என்பவரின் கணக்கில் வைப்புச் செய்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அடுத்த மாதம் 21ம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மஜிஸ்திரேட் நீதவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, சஹ்ரானின் நான்கு வயது மகளை பொருத்தமான பாதுகாவலரிடம் ஒப்படைக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு நீதிமன்றத்தைக் கேட்டுள்ளது.  தற்போது இந்த சிறுமி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ளார்.

மேலும், இது தொடர்பில் சிறுவர் மற்றும் இளைஞர் கட்டளைகள் சட்டத்திற்கு அமைய எதிர்காலத்தில் பொருத்தமான உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது.  சஹ்ரானின் மனைவி உட்பட அந்த சிறுமியுடன் உள்ள மேலும் பலர் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33