புகையிரதத்திற்காக காத்திருப்பவர்கள் தண்டவாளத்திற்குள் தள்ளி விடப்படும் சம்பவங்கள் - ஜேர்மனியில் புதிய அச்சம்

Published By: Rajeeban

30 Jul, 2019 | 11:42 AM
image

ஜேர்மனியின் பிராங்போர்ட் புகையிரதத்தில் நபர் ஒருவர் தாயையும் மகனையும் தண்டவாளத்திற்குள் தள்ளிவிட்டதில் சிறுவன் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளான்.

புகையிரதத்திற்காக காத்திருப்பவர்கள் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்ட இரண்டு சம்பவம் ஒருவார காலத்திற்குள் இடம்பெற்றிருப்பது ஜேர்மனியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நபர் ஒருவர் பெண்ணொருவரையும் அவரது 8 வயது மகனையும் தண்டவாளத்திற்குள் தள்ளிவிட்டதில் 8 வயது சிறுவன் அதிவேக புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளான் என ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் சிறுவனின் தாய் அதிஸ்டவசமாக காயங்கள் இன்றி உயிர் தப்பியுள்ளார்.

இதேவேளை சந்தேகநபரை  பயணிகள் துரத்திச்சென்று பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

தாய் கடும் அதிர்ச்சியில் உள்ளார் அவரிற்கு சிகிச்சை வழங்கிவருகின்றோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த பயங்கர சம்பவத்தை பயணிகள் நேரில் பார்த்தனர் சந்தேகநபரை துரத்தி சென்று பிடித்தனர் என காவல்துறையினர் தெரிவி;த்துள்ளனர்.

மற்றொரு நபரையும் அவர் தண்டவாளத்திற்குள் தள்ள முயன்றார் ஆனால் அந்த நபர் தன்னை பாதுகாத்துக்கொண்டார் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எரித்தியாவை சேர்ந்த நபர் ஒருவரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் இதற்கான காரணம் இன்னமும் தெரியவில்லை எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவரிற்கும் குறிப்பிட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும் ஒருவரையொருவர் நன்கு அறிந்தவர்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை ஜேர்மனியில் ஒன்பது நாட்களிற்கு முன்னர் இதேபோன்றதொரு சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.இதில் 34 வயது பெண்மணியொருவர் பலியானார்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து ஜேர்மனியின் புகையிரதநிலையங்களில் காத்திருப்பவர்கள் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் குறித்து எச்சரிகையாகயிருக்கவேண்டும் என எச்சரித்துள்ள அதிகாரிகள் தண்டவாள நுனியிலிருந்து இரண்டு மீற்றர் உள்ளே நிற்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை குடியேற்றவாசிகளிற்கும் வெளிநாட்டவர்களிற்கும் அகதிகளிற்கும் ஜேர்மனி அதிகளவில் இடமளித்ததே இந்த சம்பவங்களிற்கு காரணம் என அந்த நாட்டின் வலதுசாரி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10