வீட்டிற்குள் மர்மமாக இரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட தாயும், மகனும்..!

Published By: J.G.Stephan

30 Jul, 2019 | 10:32 AM
image

கிளிநொச்சி பகுதியில் தாயும் மகனும் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திநகர் பகுதியிலேயே இவ்வாறு தாயும் மகனும் இரத்தக் காயங்களுடன் வீட்டினுள்ளே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை என்ற தாயாரும், அவரது மகனான 34 வயதுடைய விஷ்னுகாந்தி லிங்கேஷ்வரன் என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

மேலும், உயிரிழந்தவர்களின்  உடலில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில்  தெரியவந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விரிவாக மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில், உயிரிழந்தவர்களின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47