சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நட­வ­டிக்கை எடுத்­து­வ­ரு­வ­தாக அதன் உறுப்­பினர் ஒருவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற நட­வ­டிக்­கை­க­ளின்­போது தொடர்ச்­சி­யாக ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு திட்­ட­மிட்டு அநீதி இழைக்­கப்­ப­டு­வதால் இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற கைக­லப்­பின்­போது ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு கருத்து தெரி­விப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்­காது, அவர்­களின் கடும் எதிர்ப்­புக்கு மத்­தியில் அமைச்சர் சரத் பொன்­சே­கா­வுக்கு கருத்­து ­தெ­ரி­விப்­ப­தற்கு சந்­தர்ப்பம் வழங்கி, அது கைக­லப்­பு­வரை செல்­வ­தற்கு கார­ண­மாக இருந்­ததை அவ­தா­னத்­துக்கு கொண்­டு­வந்து இந்த நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வ­தாக குறிப்­பிட்ட நபர் தெரி­வித்தார்.

அத­ன­டிப்­ப­டையில் எதிர்­வரும் தினங்­களில் ஒன்­றி­ணைந்த எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் சந்தித்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தேவையான கையெழுத்துக்களை சேகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.