மருந்துகள்  தட்டுப்பாடு ; நடவடிக்கை எடுக்காவிடின் நாடுதழுவிய  ரீதியில் வேலைநிறுத்தம்  - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்  

Published By: Digital Desk 4

29 Jul, 2019 | 09:07 PM
image

(ஆர்.விதுஷா)

நாடளாவிய  ரீதியில்  அரச வைத்தியசாலைகளில்   மருந்துப்பொருள்  தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளதுடன்,  தரமற்ற  மருந்துப்பொருட்கள்  தொடர்பிலான பிரச்சினைகளும்  ஏற்பட்டுள்ளன  .  இவ்விடயம்  தொடர்பில்  பொறுப்புக்கூற  வேண்டிய தரப்பினர்   பொறுப்பு  கூறலிலிருந்து விலகும் பட்சத்தில் நாடு  தழுவிய  ரீதியில்  தொழிற்சங்க  நடவடிக்கையில்  ஈடுபட  தீர்மானித்துள்ளதாக  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  செயலாளர்  வைத்தியர்  ஹரித  அளுத்கே  தெரிவித்தார். 

அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்த்தின்  தலைமையகத்தில் இன்று  திங்கட்கிழமை  இடம் பெற்ற  ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்து  கொண்டு  உரையாற்றுகையிலேயே   இவ்வாறு  தெரிவித்த  அவர்  தொடர்ந்து கூறியதாவது,  

நாடளாவிய  ரீதியில்  வைத்தியசாலைகளில்  அத்தியாவசிய  மருந்துப்பொருட்களுக்கு   தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.மேலும் தரமற்ற  மருந்துப்பொருள்  கொள்வனவின்  காரணமாக    பாரிய  பிரச்சினையும்  ஏற்பட்டுள்ளது. ஆகவே  ,  இது  தொடர்பில்  அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கத்தின்  மத்திய  குழு கலந்துரையாடல்களுக்கு  அமைய  முக்கிய  தீர்மானங்கள்   எடுக்கப்பட்டன. அதில்   அத்தியாவசிய  மருந்துப்பொருட்களுக்கு  அரச வைத்தியசாலைகளில்  ஏற்பட்டுள்ள  தட்டுப்பாடு  தொடர்பிலும்  ,    நோயாளிகளுக்கு வழங்கப்படும்  மருந்துப்பொருட்களில்  தரம்;  ஆராயப்பட்டது.

அரசாங்க  மருத்துவ  அதிகாரிகள்  சங்கம்  விடயங்கள்  தொடர்பில் சுகாதார  அமைச்சர்  மீது  தொடர்ந்தும்  குற்றச்சாட்டுக்களை  முன்வைத்திருந்தோம்.   இருப்பினும்  ,  52  நாள் அரசியல்  நெருக்கடியை  காரணம் காட்டி சுகாதார  அமைச்சர்  ராஜித  சேனாரத்ன  தப்பிக்க  முற்பட்டார்.   

 இந்த  விடயம்   தொடர்பில் மத்திய குழு  கூட்டத்தில்  மூன்று  தீர்மானங்களை  எடுத்துள்ளோம் .அதற்கமைய நாடளாவிய  ரீதியில்   பிரதான  வைத்திய சாலைகளில்  காணப்படும்  மருந்து  தட்டப்பாடு  குறித்த  தகவல்களை   திரட்டி  ஊடக  சந்திப்புக்களை  நடத்தி  அதன்  உண்மைத்தன்மையினை அம்பலப்படுத்தவுள்ளோம்.  

அத்துடன்,  ஜனாதிபதி  உள்ளிட்ட   பொறுப்புக்கூற  வேண்டிய  தரப்பினருக்கு    தரம் குறைந்த  மருந்து கொள்வனவும்  மற்றும்    அதனால்  ஏற்படும் பாதிப்பு  தொடர்பில்  அறிவுறுத்தவுள்ளோம்.  மேலும்  ,  இந்த  விடயம்  தொடர்பில்   கவனம்  செலுத்த  தவறும்  பட்சத்தில்  நாடளாவிய  ரீதியில்  தொழில்  சங்க  நடவடிக்கையை  மேற்கொள்ளதீர்மானித்துள்ளோம்.  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14