கடும் வறட்சி காரணமாக மன்னார் மாவட்ட நன்னீர் மீன்பிடியாளர்கள் பாதிப்பு

Published By: Digital Desk 4

29 Jul, 2019 | 12:53 PM
image

மன்னார் மாவட்டத்தில் கடந்த பல மாதங்களாக ஏற்பட்டிருக்கும் கடும் வறட்சி காரணமாக நன்னீர் மீன்பிடியை வாழ்வாதாரமாக கொண்ட பல மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக ஒழுங்கான மழை வீழ்ச்சி இன்மையால் பல இலட்சம் பெறுமதியான நெற் செய்கைகள் அழிவடைந்திருந்தது இந்த நிலையில் தொடர்ச்சியான வறண்ட காலநிலை நீடித்துவருவதால் நன்னீர் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர்.

வயல் நிலங்கள் சிறு குளங்கள் என அனைத்துக்கும் நீர் வழங்கும் பிரதான குளங்கள் அனைத்தும் நீர் அற்று வரண்டு காணப்படுவதால் நன்னீர் மீன்களும் இறந்த நிலையில் காணப்படுவதுடன் நன்னீர் குளங்களுக்கு குல்லா படகுகளில் பயணிக்க முடியாத நிலையும் காணப்படுகின்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் அதிகம் நீர்  கொண்ட கட்டுக்கரை, ஈச்சளவாக்கை, சன்னார் ,கூராய் , பெரியமடு  ஆகிய குளங்கள் அனைத்தும் வற்றிய நிலையில் காணப்படுவதால் நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் மீன்பிடியை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர் கொள்கின்றனர்.

அதே நேரத்தில் அதிக வெப்பம் காரணமாக முதலைகள் குளங்களுக்குள்  சிறிய அளவு நீர் நிலை காணப்படும் பகுதிகளுக்குள் நுழைவதால்  உயிருக்கு ஆபத்தான நிலையில் மீன் பிடியை மேற்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

  அதிக  நீர் நிறைந்து காணப்படும் கட்டுகரை குளப்பகுதியில் தற்போது மாடுகள் மேய்கின்ற அளவுக்கு நீர் வற்றி போய் காணப்படுவதாகவும் நன்னீர் மீன் பிடி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள்  தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பாக நீரியல் வள திணக்களம் மீன்பிடி அமைச்சு மற்றும் சம்மந்த பட்ட அதிகாரிகள் என பல தரப்பினரிடம் தெரிவித்துள்ள போதும் இதுவரை எந்த வித நிவாரணமோ மானியங்கலோ எங்களுக்கு வழங்கப்படவிலை எனவும்,

எனவே எங்கள் வாழ்வாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு விவசாய மக்களுக்கு வழங்கப்படுவது போன்று எங்களுக்கும் வறட்சி காலங்களில் எங்கள் வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதற்கான தற்காலிக நிவாரண உதவிகளையாவது வழங்கிவைக்குமாறு நன்னீர் மீன்பிடிப்பாளர்கள்  கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04