சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பாதிப்பாகும் புதிய முறை­மையிலான மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்த அனு­ம­திக்கக் கூடாது: நஸீர் அஹமட்

Published By: J.G.Stephan

29 Jul, 2019 | 12:53 PM
image

சிறு­பான்­மை­யி­ன­ருக்கு பெரும் பாதிப்பை தரக் கூடிய புதிய முறை­மையின் கீழ் மாகா­ண­சபைத் தேர்­தலை நடத்த ஒரு­போதும் அனு­ம­திக்கக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் முத­ல­மைச்சர் செய்­னு­லாப்தீன் நஸீர் அஹமட் ஆலோ­சனை வெளி­யிட்டார்.

மாகாண சபைத் தேர்­தல்கள் நடை­பெறவிருக்கும் சாத்­தி­யப்­பா­டுகள் குறித்து முன்னாள் முத­ல­மைச்­சரால் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை வெளி­யி­ட்­டுள்ள அறிக்­கையில் இந்த விடயம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

மாகாண சபைத் தேர்­த­லுக்­கான வர்த்­த­மானி அறி­விப்பை ஜனா­தி­பதி வெளி­யிட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மேலும் இதற்­காக உயர்­நீ­தி­மன்றம், சட்­டமா அதிபர், தேர்­தல்கள் ஆணைக்­குழுத் தலைவர் ஆகி­யோர்­க­ளிடம் ஜனா­தி­பதி யோச­னை­களை பெற்­றுக்­கொண்­டுள்ளார் எனவும் ஜனா­தி­ப­தியின் விருப்பம் புதிய முறை­மையில் தேர்­தலை நடத்­து­வது எனவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

எனவே இது விட­யத்தில் சிறு­பான்மைக் கட்­சிகள் கவ­ன­மாக செயற்­ப­ட­வேண்டும்.

கடந்த உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலில் அறி­முகம் செய்­யப்­பட்ட புதிய தேர்தல் முறையின் மூல­மாகக் கிடைக்கப்­பெற்ற பெறு­பே­று­களை சிறு­பான்மைக் கட்­சிகள் தெளி­வு­ப­ட­ அ­றிந்து, அவற்றின் சாதக பாத­கங்­களை விளக்கி மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை பழைய முறை­மையின் (விகி­தாசா­ர­ தேர்தல்) கீழ் நடத்த வேண்டும் எனக் கோரி­யி­ருந்­தன.

அதற்­கான வழி­மு­றைகள் ஆரா­யப்­பட்டு வந்த நிலையில் திடீ­ரென புதிய முறையில் தேர்­தலை நடத்­து­வது என எடுக்கும் தீர்­மானம் வர­வேற்­கத்­தக்­க­தல்ல.

ஒரு­வேளை இவ்­வாறு புதிய முறையில் மாகாண சபைத் தேர்தல் நடக்­கு­மானால்  2017ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் 21ஆம் திகதி  பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட புதிய தேர்தல் முறைக்­கான பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஆட்­சியை காப்­பாற்­று­கின்றோம் என்ற கோதாவில் கைதூக்­கி­ய­வர்கள் அனை­வரும் இதற்கு பொறுப்­புக்­கூ­ற­ வேண்டும்.

புதிய தேர்தல் முறை­மையின் கீழ் நடத்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சித் தேர்­தலின் பின்னர் அதன் பெறு­பே­றுகள் எத்­த­கைய அவ­லங்­களை சபை நட­வ­டிக்­கை­களில் ஏற்­ப­டுத்தியுள்­ளன என்­பதை யாவரும் அறிவர்.

முற்­று­மு­ழு­தாக தோல்­வி­யுற்ற ஒரு தேர்தல் முறைமை அது என்­பதை அனைத்து அர­சி­யல்­கட்­சி­களும் அர­சி­யல்­வா­தி­களும் ஆய்­வா­ளர்­களும் ஏற்­றுக்­கொண்­டுள்ள நிலையில் பிர­தமர் இது விட­யத்தில் மேற்­கொண்ட நழு­வல்­போக்கும் உதா­சீ­னங்­களும் கால­தா­ம­தங்­களும் திருப்தி தரு­வ­ன­வாக அமை­ய­வில்லை.

இந்­நி­லையில் ஜனா­தி­பதி மட்டும் புதிய தேர்தல் முறை­மையை தூக்கி பிடித்துக் கொண்­டி­ருப்­பதன் மர்­மமும் புரி­ய­வில்லை.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம் மக்­களின் கோரிக்­கைகள் அவ்­வப்­போது உதா­சீனம் செய்­யப்­பட்­டு­வரும் நிலையில் அவர்களது பிரதிநிதித்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை நாம் கைகட்டிபார்த்துக் கொண்டிருக்க முடியாது. எனவே இது விடயத்தில் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்-. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25