பட்டாஸாக ஜொலிக்கும் தனுஷ்

Published By: Digital Desk 4

29 Jul, 2019 | 11:02 AM
image

தனுஷ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘பட்டாஸ்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது.

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் தனுஷ், தன்னுடைய ரசிகர்களுக்கு புதிய படத்திற்கான டைட்டிலையும் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு உற்சாகப்படுத்தியிருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘பட்டாஸ்’ என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்நிறுவனத்தின் சார்பில் வெளியான ‘தொடரி’ என்ற படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருந்தார் என்பதும், அப்படத்திற்கு ஏற்பட்ட வணிகரீதியான இழப்பிற்கு ஈடுசெய்யும் வகையில் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்டாஸ் படத்தில் தனுஷ் ஒரு தற்காப்புக் கலை நிபுணராக, தந்தை =மகன் என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சினேகா மற்றும் நடிகை மெஹ்ரீன் பிர்ஸாதா ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.விவேக்-மெர்வின் இசை அமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குனர் துரை செந்தில்குமார்.

படத்தை பற்றி அவர் பேசுகையில்,“ கேரளாவில் பாரம்பரிய தற்காப்பு விளையாட்டாக இருக்கும் களரி விளையாட்டுக்கு முன்பாக சோழர்கள் காலத்தில் தற்காப்புக் கலையாக விளங்கியது பட்டாஸ் என தற்போது அழைக்கப்படும் சுருள் கத்தி வீச்சு. இந்த தற்காப்பு கலையில் வல்லவராகவும், இந்தக் கலையைப் பற்றிய பதிவாகவும் இந்த படம் தயாராகிறது. அத்துடன் தந்தை =மகன் என்ற உறவு சிக்கலையும் உணர்வுபூர்வமாக இப்படம் பேசுகிறது.” என்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. 

தனுஷின் பிறந்தநாளையொட்டி ‘பட்டாஸ்’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

இயக்குநர் துரை செந்தில்குமார் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த ‘கொடி’ என்ற வெற்றிப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35