கர்­நா­ட­காவில் ஆணுறை பற்­றாக்­கு­றையாக உள்­ளதால் எய்ட்ஸ் நோய் வேக­மாக பரவும் அபாயம் அதி­க­மாக உள்­ளது. இதனால், பாலியல் தொழி­லா­ளிகள் அச்­சத்தில் இருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கர்­நா­ட­காவில் ஆணு­றை­க­ளுக்கு கடும் பற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ள­தாக பாலியல் தொழி­லா­ளி­க­ளுக்கு ஆணு­றை­களை இல­வ­ச­மாக வழங்கும் அர­ச­சாற்­பற்ற நிறு­வ­னங்கள் தெரி­வித்­துள்­ளன.

மேலும், கர்­நா­டகா மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூ­கத்­தி­லி­ருந்து போதிய ஆணு­றைகள் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கி­றது. ஆயினும், அச்­சப்­பட வேண்டாம் பாலியல் தொழி­லா­ளி­க­ளுக்கு வழங்க விரைவில் போதிய அளவு ஆணு­றைகள் கொள்வனவு செய்­யப்­படும் என்று கர்­நா­டகா மாநில எய்ட்ஸ் தடுப்பு சமூக திட்ட தலைவர் எஸ்.ஜி. ரவீந்­திரா தெரி­வித்­துள்ளார்.

கர்­நா­டகா மாநி­லத்தில் உள்ள பாலியல் தொழி­லா­ளி­க­ளுக்கு மாநில அரசு மாதந்­தோறும் 26 முதல் 30 இலட்சம் ஆணு­றை­களை இல­வ­ச­மாக வழங்கி வரு­கி­றது. டிசம்பர் மாதம் பாலியல் தொழி­லா­ளி­க­ளுக்கு வழங்க வெறும் 6.9 இலட்சம் ஆணு­றை­களே உள்­ளன. இப்­படி ஆணுறை பற்­றாக்­குறை இருப்­பதால் எய்ட்ஸ் நோய் பரவும் என்ற அச்­சத்தில் பாலியல் தொழி­லா­ளிகள் உள்ளனர். எச்.ஐ.வி. வைரஸ் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கர்நாடகாவும் ஒன்று என்பது குறிப் பிடத்தக்கது.