"சமூக சேவையின் ஊடாக கிடைக்கும் ஆசிர்­வாதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது": ஆளுநர் பி. மஹேந்­திரனின் விசேட செவ்வி

Published By: J.G.Stephan

29 Jul, 2019 | 12:18 PM
image

எந்­த­வொரு நப­ராலும் தனது சொந்த பணத்தை கொண்டு சமூக சேவை­களை முன்­னெ­டுக்க முடி­யாது. ஆனால் லயன்ஸ் கழ­கத்தில் உள்­ள­வர்கள் தமது சொந்த பணத்தை கொண்டு சமூ­கத்தில் பல தன்­னார்வ தொண்டு செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

ஒரு சமூ­கத்தின் தேவையை நிறை­வேற்றும் போது அதன் மூலம் எங்­க­ளுக்கு கிடைக்கும் ஆசிர்­வா­தத்தை வார்த்­தை­களால் விவ­ரித்­து­விட முடி­யாது என சர்­வ­தேச லயன்ஸ் கழ­கத்தின் 306 பி1 இன் மாவட்ட ஆளு­ந­ரான பி. மஹேந்­திரன் தெரி­வித்தார்.

சர்­வ­தேச லயன்ஸ் கழகம் 1917ஆம் ஆண்டு அமெ­ரிக்­க­ரான மெல்வின் ஜோன்ஸ் என்னும் மனி­தா­பி­மான ஆர்­வலர் ஒரு­வரால் ஆரம்­பிக்­கப்­பட்ட தொண்டு சேவை அமைப்­பாகும்.

இன்று இந்த அமைப்பு உல­கி­லுள்ள பிர­பல்யம் வாய்ந்த தன்­னார்வ தொண்டு அமைப்­பாக திகழ்­கின்­றது.இதன் விசேட தன்மை என்­ன­வென்றால் சர்­வ­தேச தலைவர் தொடக்கம் கீழ்­மட்ட அங்­கத்­தவர் வரை அனை­வரும் எவ்­வித பிர­தி­ப­ல­னையும் எதிர்­பா­ராது தன்­னார்­வத்­துடன் மனி­தா­பி­மான ரீதியில் சேவை­களை முன்­னெ­டுக்கும் அமைப்­பாகும்.

இந்­நி­லையில் சர்­வ­தேச லயன்ஸ் கழ­கத்தின் 306 பி1 இன் மாவட்ட ஆளு­ந­ராக  கடந்த  9ஆம் திகதி இத்­தா­லியில் பத­வி­யேற்ற பி. மஹேந்­திரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு விசேட செவ்வி ஒன்றை வழங்­கி­யி­ருந்தார்.

அந்த செவ்­வியின் முழு வடிவம் பின்­வ­ரு­மாறு,

கேள்வி: இலங்­கையில் உள்ள லயன்ஸ் கழ­கங்கள் தொடர்­பிலும் அதன் செயற்­பா­டுகள் தொடர்­பிலும் கூற முடி­யுமா?

பதில்: இலங்­கையில் லயன்ஸ் கழகம் 61  வரு­டங்­க­ளுக்கு முன்னர், அதா­வது 1958ஆம் ஆண்டு இந்­தி­யாவின் பங்­க­ளிப்­புடன் ஆரம்­ப­மா­னது.முத­லா­வது லயன்ஸ் கழ­க­மாக 'கொலம்பு ஹொஸ்ட்' என்னும் லயன்ஸ் கழகம் அமைக்­கப்­பட்­டது. தற்­போது இலங்­கையில் எல்லா இடங்­க­ளிலும் லயன்ஸ் கழ­கங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

அவற்றின் நிர்­வாக நட­வ­டிக்­கை­களை இல­கு­வாக மேற்­கொள்ள 6 மாவட்­டங்­க­ளாகப் பிரிக்­கப்­பட்­டுள்­ளன. 15 ஆயிரம் அங்­கத்­த­வர்கள் காணப்­ப­டு­கின்­றனர்.

ஒரு கழ­கத்தை அமைக்க ஆகக் குறைந்­தது 20 உறுப்­பி­னர்கள் காணப்­பட வேண்டும். இவர்கள் தமது சொந்த பணத்தை கொண்டே தன்­னார்வ தொண்டு செயற்­பா­டு­களில் ஈடு­பட வேண்டும். இவர்­க­ளுக்கு எவ்­வித ஊதி­யமும் வழங்­கப்­பட மாட்­டாது. சமூ­கத்­துக்கு தனி ஒரு நபரால் சேவையை செய்­வது கடி­ன­மான ஒன்­றாகும். ஒரு குழு­வாக சேர்ந்து சமூக சேவை­களை முன்­னெ­டுப்­பது இல­கு­வா­ன­தாகும். இத­னையே எவ்­வித இலாப நோக்­கமும் இன்றி லயன்ஸ் கழ­கங்கள் செய்­கின்­றன.

உல­க­லா­விய ரீதியில் 210 நாடுகள் சர்­வ­தேச லயன்ஸ் கழ­கத்தில் அங்­கத்­துவம் வகித்து சமூக சேவை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. உல­க­ளவில் 750 மாவட்­டங்­களின் கீழ் பல லயன்ஸ் கழ­கங்கள் செயற்­ப­டு­கின்­றன.நான் 306 பி1 இன் மாவட்ட ஆளு­ந­ராக இம்­மாதம் பத­வி­யேற்றேன்.

கொழும்பு, வத்­தளை, ஜாஎல, நீர்­கொ­ழும்பு, வென்­னப்­புவ, புத்­தளம், மன்னார், வவு­னியா, முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மற்றும் யாழ்ப்­பாணம் ஆகிய பகு­தி­களில் எமது சமூக சேவை­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம்.

பொது­மக்­க­ளுக்கு ஒரு சேவையை செய்யும் போது அதனை திறம்­பட செய்­வதே எமது அடிப்­படை நோக்­க­மாகும். எமது செயற்­பா­டு­களில் வெளிப்­படை தன்மை மற்றும் பொறுப்பு கூறல் காணப்­ப­டு­வ­தா­லேயே லயன்ஸ் கழகம் உல­க­ளவில் முதற்­தர அமைப்­பாக காணப்­ப­டு­கின்­றது. லயன்ஸ் கழ­க­மா­னது ஒரு கட்­டு­கோப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் தேவை இன்று அதி­க­மாக காணப்­ப­டு­கின்­றது. இவர்­க­ளுக்கு எமது கழ­கத்தின் ஊடாக சேவை  செய்யும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது. இதே­வேளை இந்த மக்­க­ளுக்கு வெளி­நாட்டில் உள்­ள­வர்கள் உதவி செய்ய ஆர்­வ­மாக இருப்­பார்கள். ஆனால் அந்த உத­வியை எவ்­வாறு பெற்­றுக்­கொ­டுப்­பது என்­பதில் அவர்­க­ளுக்கு எவ்­வித தெளிவும் இருக்­காது.

எனவே இவ்­வாறு மக்­க­ளுக்கு உதவி செய்ய விரும்­பு­பவர்கள் கூட எமது கழ­கத்தின் ஊடாக உதவி செய்­யலாம். கடந்த வரு­டத்தில் 12 மில்­லியன் ரூபா பெறு­மதியான வேலைத்­திட்­டங்­களை செய்­தி­ருந்தோம்.

இதே­வேளை யாழ். ஆதார வைத்­தி­ய­சா­லையில் சுமார் 6 மில்­லியன் பெறு­ம­தி­யான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தி­ருந்தோம். மேலும் கோப்பாய் ஆதார வைத்­தி­ய­சா­லையில் பல வேலைத்­திட்­டங்­களை செய்­தி­ருந்தோம்.

கேள்வி: 306 பி1 இன் மாவட்ட ஆளு­ந­ராக நீங்கள் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளீர்கள். உங்கள் கழ­கத்தின் ஊடாக முன்­னெ­டுக்­கப்­படும் சமூக சேவைகள் தொடர்­பிலும் லயன்ஸ் கழ­கத்தில் உங்­க­ளு­டைய அனு­பவம் தொடர்­பிலும் கூற முடி­யுமா?

பதில்: லயன்ஸ் கழ­கத்தில் ஒருவர் ஆளு­ந­ராக ஒரு வருடம் மாத்­தி­ரமே செய­லாற்ற முடியும். இந்­நி­லையில் கடந்த 9  ஆம் திக­தியே 306 பி1 இன் மாவட்ட ஆளு­ந­ராக இத்­தாலி மிலான் நக­ரில்­ ந­டை­பெற்ற சர்­வ­தேச லயன்ஸ் கழ­கத்தின் 202 சர்­வ­தேச மாநாட்டில் பத­வி­யேற்­றுக்­கொண்டேன்.

லயன்ஸ் கழ­கத்தில் கடந்த 30 வரு­டங்­க­ளாக சேவை­யாற்றி வரு­கின்றேன். எமது சமு­தா­யத்தில் எவ்­வித பிரச்­சி­னை­கள் காணப்­பட்­டாலும் உட­ன­டி­யாக அந்த இடத்­திற்கு சென்று எம்மால் முடிந்த உத­வி­களை செய்தோம்.

இதன் மூலம் இன்று ஆளு­ந­ராக பத­வி­யேற்க முடிந்­தது. இதே­வேளை லயன்ஸ் கழ­கத்தில் இணைந்து பணி­யாற்­று­வதால் நபர் ஒரு­வரின் தனிப்­பட்ட தலை­மைத்­துவ பண்பும் வளர்ச்­சி­ய­டைகின்­றது. இதே­வேளை 2021 ஆம் ஆண்­டுக்கு முன்னர் எமது கழ­கத்தில் உள்ள 5 இலட்சம் அங்­கத்­த­வர்­க­ளுக்கு  தலை­மைத்­துவ பண்­புகள் தொடர்­பாக பயிற்­சி­களை வழங்க உள்ளோம். .

கடந்த வரு­டத்தில் மாத்­திரம் 220 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான வேலைத்­திட்­டங்­களை செய்­தி­ருந்தோம். இந்த பணம் ஒவ்­வொரு தனிப்­பட்ட நப­ரினால் வழங்­கப்­பட்ட பண­மாகும்.

சமூ­கத்­திற்கு சேவை செய்ய வேண்டும் என பலர் எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருப்­பார்கள். ஆனால் அவர்­க­ளுக்கு சந்­தர்ப்­பங்கள் அமை­வ­தில்லை. இவர்கள் லயன்ஸ் கழ­கத்தின் ஊடாக தமது சமூ­கத்­திற்கு சேவை­களை செய்­யலாம். மேலும் இவ்­வ­ரு­டத்தில் இலங்கை நீரி­ழிவு சங்­கத்­துடன் இணைந்து நீரி­ழிவு நோய் தொடர்­பான விழிப்­பு­ணர்வு செயற்­பா­டு­களை செய்­ய­வுள்ளோம்.

மேலும் எனது நிர்­வா­கத்தின் கீழ் உள்ள பல வைத்­தி­ய­சா­லை­க­ளுக்கு மில்­லியன் கணக்­கான உத­வி­களை செய்­துள்ளோம்.

கேள்வி: லயன்ஸ் கழ­கத்­தினால் முக்­கிய ஐந்து விட­யங்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­ப­டு­கின்­றது என்­றீர்கள். அது தொடர்பில் கூற முடி­யுமா?

பதில்: கண்­புரை அறுவை சிகிச்சை, நீரி­ழிவு நோய் தொடர்­பான விழிப்­பு­ணர்வு நிகழ்ச்சித் திட்­டங்கள், சுற்­றாடல் நிகழ்ச்சித் திட்­டங்கள், பட்­டி­னியை போக்­குதல், இளை­ஞர்­களின் அபி­வி­ருத்தி போன்ற முக்­கிய வேலைத்­திட்­டங்­களை நாம் முன்­னெ­டுக்­கின்றோம். மற்றும் தற்­போது புதி­தாக புற்­றுநோய் தொடர்­பான வேலைத்­திட்­டங்­களை செய்து வரு­கின்றோம்.

கேள்வி: லயன்ஸ் கழ­கங்கள் சமூக சேவைகள் தவிர்ந்த ஏனைய செயற்­திட்­டங் ­க­ளையும் ஏதும் முன்­னெ­டுக்­கின்­றதா?

பதில்: சேவை நோக்­கமே எமது அடிப்­ப­டை­யாக இருக்­கின்­றது. இதற்கு அப்பால் தலை­மைத்­துவ பண்பை உரு­வாக்க லயன்ஸ் கழகம் பல பயிற்­சி­களை வழங்கி வரு­கின்­றது. இதே­வேளை 2021 ஆம் ஆண்­டுக்கு முன்னர் நாட்டில் எந்­தெந்த இடத்தில் மக்­களின் தேவைப்­பா­டுகள் இருக்­கின்­றதோ அங்­கெல்லாம் எமது உட­னடி சேவையை வழங்­குவதே முக்­கிய இலக்­காக உள்­ளது.

ஒரு சமூ­கத்தின் தேவையை நிறை­வேற்றும் போது அதன் மூலம் எங்­க­ளுக்கு கிடைக்கும் ஆசிர்­வா­தத்தை வார்த்­தை­களால் விவ­ரிக்க முடி­யாது.

கேள்வி: லயன்ஸ் கழ­கத்தில் ஒருவர் அங்­கத்­த­வ­ராக வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

பதில் : ஏனைய கழ­கங்­களில் போன்று விண்­ணப்­பித்து லயன்ஸ் கழ­கத்தில் இணைய முடி­யாது. அதா­வது லயன்ஸ் கழ­கத்தில் நன்கு அறி­மு­க­மான நம்­பிக்­கை­க்கு­ரிய நபர்­களே இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்கள். அதா­வது ஒரு குடும்­ப­மாக இணைந்து சமூக சேவையை செய்யக் கூடிய நப­ராக இருக்­க­வேண்டும். மேலும் கழ­கத்தில் இணை­வ­தற்கு முன் கழ­கத்தின் செயற்­பாடுகள் மற்றும் அதன் சேவைகள் தொடர்பில் முதலில் அறிந்­து­கொள்ள வேண்டும்.

கேள்வி: இலங்கை  சுனாமி தாக்­கு­த­லுக்கு இலக்­கானபோது சர்­வ­தேச லயன்ஸ் கழ­கத்தால் 7.5 மில்­லியன் டொலர் பண உதவி வழங்­கப்­பட்­டது. இதே­போன்று இலங்­கையில் அண்­மையில் பதி­வான தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலின் பின்னர் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நன்மை கருத்தி எவ்­வித உத­வி­களும் வழங்­கப்­பட்­டதா?

பதில்: இயற்கை அனர்த்­தங்­க­ளுக்கே சர்­வ­தேச லயன்ஸ் கழகம் நிதி உத­வி­களை வழங்கும். அது­போன்றே சுனாமி காலத்தில் நிதி உதவி வழங்­கப்­பட்டு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு வீடு­களை கட்­டிக்­கொ­டுத்தோம். ஆனால் அண்­மையில் பதிவான குண்டு வெடிப்பு சம்பவம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட சம்பவமாகும். இருந்தும் சர்வதேச லயன்ஸ் கழகத்தில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் நிதி உதவிகளை வழங்கியிருந்தன.


- எம்.டி. லூசியஸ் -

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22