தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறு உருவானார்கள் ; டிலும் அமுனுகம 

Published By: Digital Desk 4

28 Jul, 2019 | 11:39 AM
image

1983 ஆம் ஆண்டு காலத்திலே வாஸ் குணவரத்தன என்ற அமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டு வீசப்பட்ட காரணத்தினால் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்த பொலிஸாருக்கு ஒரு வாரம் விடுமுறையளித்திருந்தது. 

அதுபோல் தெற்கிலும் கடைகளுக்கு தீவைத்தனர், பின்னர் தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்ற ஒரு குழுவும் வடக்கில் கடைகளுக்குத் தீவைத்துக் கொழுத்தியது. இந்த சூழ்நிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவானார்கள்.

மகிந்த ராஜபக்ஷதான் யுத்தத்தை நிறைவு செய்தார் ஆகவே அவருக்கு  வாக்குகளை வழங்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இப்பகுதி மக்களிடம் சில கருத்துக்களை விதைத்துள்ளார்கள். அதனால்தான் இப்பகுதி மக்கள் கடந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்கவில்லை  என பொதுஜன பெரமுன கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டிலும் அமுனுகம மட்டக்களப்பு களுவாஞ்சிடியில் வைத்து தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் பட்டியிருப்புத் தொகுதிக்கான இளைஞர்அணி மாநாடு களுவாஞ்சிகுடி கஜா கலாசார மண்டபத்தில் சனிக்கழமை (27) மாலை நடைபெற்றது. 

பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும், செயற்பாட்டாளருமான சந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் இளைஞர் அணித் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினர் டிலும் அமுனுகம உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த காலங்களைப்போல் தற்போதைய இளைஞர் யுவதிகள் முட்டாள்கள் இல்லை தற்போதைய இளைஞர் யுவதிகள் நன்கு சிந்தித்துச் தேவையானவற்றைப் பெற்றுக் கொள்ளக்கூடியவர்களாவர். தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக இளைஞர் யுவதிகள் தமது அறிவுகளைப் பெருக்கிக் கொள்கின்றார்கள். கடந்த காலங்களில் மகிந்த ராஜபக்ச தேர்தல்களில் நிற்கும்போது, அதிகளவு மக்கள் இப்பகுதியில் வாக்குகளை அவருக்கு வழங்கவில்லை என்பது எமக்கு நன்கு தெரியும். மகிந்த ராஜபக்சதான் யுத்தத்தை நிறைவு செய்தார் ஆகவே அவருக்கு வாக்குகளை வழங்கவேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இப்பகுதி மக்களிடம் சில கருத்துக்களை விதைத்துள்ளார்கள். அதன்காரணமாக ரணில் விக்கிரம சிங்கவுக்கும், மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் கூறியுள்ளது. 

மகிந்த ராஜபக்சவுக்கு இப்பகுதி மக்கள் குறைவாக வாக்களித்திருந்தாலும், அவர் இப்பகுதி மக்களுக்கு குறைவான அளவு வேலை செய்யவில்லை. யுத்தம் நிறைவு பெற்றாலும் அப்பகுதி மக்களிடத்தில் வேதனைகள் இருக்கும் அதனால்தான் அவர்கள் எமக்கு வாக்களித்தது குறைவாக்க இருக்கும் எனினும் அவர்கள் எமது சகோதரர்கள் அவர்களுக்கு நாம் பணிபுரிய வேண்டும் என மகிந்த ராஜபச்ச எம்மிடம் தெரிவித்திருந்தார்.

பின்னர் வடக்கின் வசந்தம், கிழக்கின் உதையம் போன்ற திட்டங்களை உருவாக்கி இப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. யுத்தத்தை நிறைவு செய்தது மகிந்த ராஜபக்சதான் ஆனால் யுத்தத்தை தொடங்கியது மகிந்த ராஜபக்ச அல்ல. 1983 ஆம் ஆண்டு காலத்திலே வாஸ் குணவரத்தன என்ற அமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து குண்டு வீசப்பட்ட காரணத்தினால் அன்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் யாழ்ப்பாணத்திலிருந்த பொரிஸாருக்கு ஒரு வாரம் விடுமுறையளித்திருந்தது. 

அதுபோல் தெற்கிலும் கடைகளுக்கு தீவைத்தனர், பின்னர் தெற்கிலிருந்து வடக்கிற்குச் சென்ற ஒரு குழுவும் வடக்கில் கடைகளுக்குத் தீவைத்துக் கொழுத்தியது. இந்த சூழ்நிலையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவானார்கள். 

1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தெற்குப்பகுதியிலிருந்த சிங்கள மக்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், பாகுபாடு காட்டப்பட்டதன் காணரமாக தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று அமைப்பு ஜேவிபி என்ற ஒரு அமைப்பு சிங்கள மக்களிடத்தில் தோன்றியது. சிங்கள பயங்கவராத்தை ஒளிக்கவேண்டும் என கூறிய ஐக்கியதேசியக் கட்சி 40000 சிங்கள மக்களைக் கொன்றொளித்து.

 அந்த யுத்தத்தை நிறைவு செய்தது. யாழ்ப்பாணத்திலே நடைபெற்ற சிறியதொரு நிகழ்வை பொதுமக்களின் கைகளிலே வழங்கிய ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டால் நாங்கள் 30,35 வருடங்கள் கொடூர யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மகிந்த ராஜகச்ச ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள்  அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்குத் தீர்வு காண்போம் என முயன்றபோது அதற்கு அவர்கள் இணங்காத காரணத்தினாலே யுத்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 இதனால் மாவிலாறுவரைக்கும் யுத்தம் இடம்பெற்றது அதிலே யுத்தம் நிறைவுக்குக் கொண்டுவர வேண்டியிருந்தது. இவ்வாறு மகிந்த ராஜபக்ச செய்த இச்செயலால் தற்போது மக்கள் நிம்மதியாக யுத்தம் இல்லாமல் வாழ்கின்றார்கள். தேசிய அடையாள அட்டை இல்லாமல் நாட்டின் நாலாபாகமும் பிரயாணம் செய்ய முடிந்துள்ளது, பாதைகள் பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஒரே நேரத்தில் 58000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

வடக்கு கிழக்கு மக்கள் வாக்களிக்கவில்லை என்பதனால் இப்பகுதியில் அபிவிருத்திகள் செய்யாமலில்லை ஆனால் மாறாக யுத்தத்தைக் கொண்டுவந்த கட்சிக்கு மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கு இணங்க இரண்டாவது முறையாகவும் மக்கள் அக்கட்சிக்குத்தான், வாக்களித்துள்ளார்கள். எனவே இப்பகுதி மக்கள் வாக்களித்தவர்களா இப்பகுதியில் அதிகளவு அபிவிருத்திகளைச் செய்துள்ளார்கள், வாக்களிக்காதவர்களா அபிவிருத்திகளைச் செய்துள்ளார்கள் என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். 

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வடக்கு கிழக்கில் அரசாங்கத்திற்கு எதிராகவும், கொழும்பில் அரசாங்கத்தின் நண்பர்களாகவும் செயற்படுகின்றார்கள். அரசாங்கத்திடம் காசு வாங்குகின்றார்கள், உதவிகளைப் பெறுகின்றார்கள், சம்மந்தனுக்கு கொழும்பில் வீடு வழங்கப்பட்டுள்ளது, சொகுசு வாகனம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் நாங்கள் வி.ஐ.பிக்களின்  சுகபோகங்களைக் குறைத்து அடிமட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்துவதுதான் எமது நோக்கமாகவுள்ளது.

மக்கள் கடந்த காலத்தில் வாக்களித்த கட்சியினர் தொழில் வாய்ப்புக்களையோ, தொழில்போட்டைகளையோ வழங்கமுடியாதுள்ளனர். வாழைச்சேனை கடதாசி ஆலை தற்போதும் பூட்டப்பட்டிருக்கின்றது. எமது ஆட்சி வந்தவுடன் இப்பகுதியிலுள்ள தொழிற்சாலைகளைத் திறந்து வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தவுள்ளோம். 

தேர்தலில் எமக்கு வாக்களிக்குமாறு நான் கூறவில்லை, மக்களுக்கு யார் சேவையாற்றக்கூடிவர்கள் என்பதை நன்கறிந்து எதிர்காலத்தில் வாக்களிக் வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30