புள்ளிகளால் கலாம் ஓவியம்; பாடசாலை மாணவர்கள் அசத்தல்..!

Published By: Daya

27 Jul, 2019 | 12:54 PM
image

தமிழகத்தின் பழனி அருகே, 780 மாணவர்கள் இணைந்து ஒரு இலட்சம் புள்ளிகளால் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் உருவத்தை வரைந்துள்ளனர்.

மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 4ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதைமுன்னிட்டு, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள புஷ்பத்தூர் ஸ்ரீவித்யாமந்திர் பாடசாலை ஓவிய ஆசிரியர்கள் சோலை அபிராமி, கணேஷ், கரன், ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன் ஷெரிப் வழிகாட்டுதலில் புள்ளி ஓவிய முறையில் கலாம் ஓவியத்தை வரைந்துள்ளனர்.

பாடசாலையின் 780 மாணவர்கள் இணைந்து, மூன்று நாட்கள் உழைப்பில் மொத்தம் ஒரு லட்சம் புள்ளிகளில் 30 அடி உயரம், 20 அடி அகலத்தில் வரையப்பட்டுள்ள இந்த ஓவியத்தில், 'கனவு என்பது தூக்கத்தில் வருவதல்ல உங்களை தூங்கவிடாமல் செய்வது' என்ற அவரது பொன்மொழியையும் எழுதியுள்ளனர். 

ஓவியம் வரைந்த மாணவர்களை பாடசாலை  நிர்வாகி சுவாமிநாதன், முதல்வர் வசந்தா, ஆசிரியர்கள் வாழ்த்தினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right