புகையிரத திணைக்களத்தினால் அரசுக்கு வருடாந்தம் 700 கோடி ரூபா நட்டம் : அசோக் அபேசிங்க

Published By: R. Kalaichelvan

27 Jul, 2019 | 12:17 PM
image

(நா.தினுஷா)

போக்குவரத்து சேவை மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப்பிணைந்ததாகும். இலங்கை போக்குவரத்து சபையினூடாக கடந்த வருடத்தின்  இறுதியில்  200 பில்லியன் ரூபா இலாபத்தை பெற்றுக்கொள்ள கூடியதாக இருந்தது.  ஆயினும் போக்குவரத்து அமைச்சுக்கு புகையிரத திணைக்களத்தினால் வருடமொன்றுக்கு 700 கோடி ரூபா நட்டம் ஏற்படுவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சின்  வேலைத்திட்டங்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. அவர் அங்கு மேலும்  கூறியதாவது,  

இலங்கை புகையிரத திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, மோட்டார் போக்குவரத்து திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், தேசிய வீதி பாதுகாப்பு செயலகம், வரையறுக்கப்பட்ட லக்திவ பொறியியல் தனியார் நிறுவனம், சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை, வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம்  ஆகிய ஒன்பது நிறுவனங்கள் போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கி வருகின்றன.  

2015 ஆம் ஆண்டு ஆட்சியை பொறுப்பேற்றுக் கொண்ட போது போக்குவரத்து துறையில் பாரிய குறைப்பாடுகள் இருந்தன. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்பட்டிரக்க வில்லை. 106 இலங்கை போக்குவரத்து  சபைகளில் 79 போக்குவரத்து சபைகளை சேர்ந்த ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக செலுத்தப்பட்டிருக்க வில்லை. இருப்பினும்  2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் செலுத்தப்பட வேண்டியிருந்த சகல கொடுப்பனவுகளையும் அவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம். செலுத்தப்படாது இருந்த  முழு கொடுப்பனவு தொகையும் தற்போது செலுத்தப்பட்டுள்ளன. 

போக்குவரத்து சபையின் சகல அதிகாரிகளுக்குமான மாதாந்த கொடுப்பனவுகள் தற்போது முறையாக பெற்றுக்கொடுக்கப்பட்டு வருகின்றன. ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளுக்கு அப்பால் போக்குவரத்து சபையினூடாக பாரியளவான நிதி சேமிப்பும் இடம்பெறுகிறது. அந்த நிதி சேமிப்புகளின் மூலம் புதிய பேருந்துகளையும் கொள்வனவு செய்துள்ளோம். போக்குவரத்து சபை கடந்த வருடத்தில் 200 பில்லியன் ரூபா இலாபத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.  போக்குவரத்துசபையின் வருமானத்தை அதிகரித்து அந்த சபையின் ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 

போக்குவாரத்து சபையின் நாளொன்றுக்கான வருமானம் 10 கோடி ரூபாவாகும். இந்த வருடத்தின் இறுதியில் நவீனமயப்படுத்தப்பட்ட  2000  பேருந்துகளை  கொள்வனவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம். 

நாளொன்றுக்கு நான்கு இலட்சம் வரையிலான மக்கள் புகையிரத சேவையை பயன்படுத்துகிறார்கள். மாத்தறையில் - பெலியத்த வரையிலான புகையிர சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பெலியத்தையில் இருந்து அம்பாந்தோட்டை வரையிலான புகையிரத சேவைகளை அரம்பிப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன. 

போக்குவரத்து அமைச்சின் கீழ் இயங்கும் சகல திணைக்களங்களிலும் புகையிரத திணைக்களமே அதிக நட்டத்தை சந்திக்கும் நிறுவனமாக இருந்து வருகிறது. புகையிர திணைக்களம் ஒருவருடத்துக்கு 700 கோடி ரூபா நட்டத்தை சந்திக்கிறது. புகையிரத கட்டணத்தின் குறைவு, தொடரச்சியான வேலைநிறுத்த போராட்டங்கள் என்பன இந்த நட்டத்துக்கு முக்கிய  காரணங்களாகும்;.  எவ்வாறாயினும் புகையிரத சேவையில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தே வருகிறோம். 

ஹபரண - குருணாகலை புகையிரத வேலைத்திட்டம், பெலியத்த - கதிர்காமம் - அம்பாந்தோட்டை புகையிரத வேலைத்திட்டம் உள்ளிட்ட புகையிரத பாதை நவீனமயப்படுத்தல் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. களனி புகையிரத வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன. 2024 ஆம் ஆண்டாகும் போது களனி - அவிசாவலை வரையிலான புகையிரத வேலைத்திட்டம் நிறைவடையும். 

பிரதான புகையிரத பாதைகளை நவீனமயப்படுத்தல், புகையிரத நிலையங்களை நிர்மாணித்தல் உள்ளிட்ட பல்வேறு  வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. அவ்வாறே தேசிய நிறுவனத்தினூடாக புகையிரத பெட்டிகளை  நவீனமயப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அடுத்த மாதம்  இறுதியில் 200 வரையான நவீன மயப்படுத்தப்பட்ட  புகையிரத பெட்டிகளை பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இந்தியாவின் கடன் உதவியில் இன்னும் 160 புதிய புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்யவும் எதிர்பார்த்துள்ளோம்.  அவ்வாறே மோட்டார் வாகனங்கள், விமானங்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21