மனைவியும் பிள்ளைகளும் நீரில் மூழ்குவதை பார்த்தேன்- லிபிய படகு விபத்தில் உயிர்தப்பியவரின் துயரம்

Published By: Rajeeban

27 Jul, 2019 | 11:19 AM
image

லிபிய கடற்பரப்பில் கவிழ்ந்த படகிலிருந்த குடியேற்றவாசியொருவர் தனது பிள்ளைகளும் மனைவியும் நீரில் மூழ்குவதை  பார்த்ததாக தெரிவித்துள்ளார்.

லிபிய கடற்பகுதியில்  குடியேற்றவாசிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த  படகு  கவிழ்ந்ததில் 150 பேர் பலியாகியுள்ளனர்.

ஆப்பிரிக்க அராபிய நாடுகளை சேர்ந்த 300பேருடன் பயணித்துக்கொண்டிருந்த படகுக் கரையிலிருந்து 8 கிலோமீற்றர் தொலைவில் நீரில் மூழ்கியுள்ளது.

இதனை தொடர்ந்து சுமார் 100 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தவருடத்தில் படகு கவிழ்ந்ததில் லிபிய கடற்பகுதியில்  அதிகளவானவர்கள் கொல்லபட்ட சம்பவம் இதுவென யுஎன் எச் சீர் ஆர் தெரிவித்துள்ளது.

லிபிய கடற்பகுதியிலிருந்து படகு  புறப்பட்டு சில நிமிடங்களில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது..

லிபிய கடற்பகுதியில் விபத்துக்குள்ளான படகு புறப்பட்டு 90 நிமிடங்களின் பின்னர் படகிற்குள் நீர் வரத்தொடங்கியது என உயிர் தப்பியவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை மாலை லிபிய கடற்பகுதியிலிருந்து ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட மூன்று படகுகளில் நாங்கள் புறப்பட்டோம் என உயிர் தப்பியவர்கள் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பிடம் தெரிவித்துள்ளனர்.

சூடான் எகி;ப்து பங்களாதேஸ் எரித்திரியா  ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அந்த படகிலிருந்தனர் என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

படகுகள் பயணித்துக்கொண்டிருந்தவேளை தீடீர் என ஒரு படகுகிற்குள் நீர்வரத்தொடங்கியது என உயிர்தப்பியவர்கள்  குறி;ப்பிட்டனர் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிறுவர்களால் நீந்த முடியவில்லை  உயிரை பணயம் வைத்து நீந்தியவர்களும் களைப்படைந்து நீரில் மூழ்கினர் என உயிர்தப்பியவர்கள் குறிப்பிட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

சூடானை சேர்ந்த நபர் ஒருவரை நீரிலிருந்து எங்கள் குழுவினர் இழுத்து எடுத்தனர் அவர் தனது மனைவியும் குழந்தைகளும் நீரில் மூழ்கியதை கண்ணால் பார்த்ததாக கதறினார் எனவும் எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பை சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தனது ஏழு வயது மகனை பறிகொடு;த்த ஒருவர் எனக்கு எதுவும் வேண்டாம் நான் லிபியாவிற்கே திரும்பி செல்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை லிபிய கடற்பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் பலியான பலரின் உடல்கள் நீரி;ல் மிதப்பதை காணமுடிவதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

படகு விபத்தில் உயிர்தப்பியவர்களை மீட்பதற்கான முயற்சிகளின் போது பல உடல்கள் நீரில் மிதப்பதை காணமுடிந்ததாக  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 மத்தியதரை கடற்பகுதியில் இந்த வருடம் இடம்பெற்ற மிக மோசமான துயரம் என  ஐநா அதிகாரியொருவர் இதனை வர்ணித்துள்ளார்.

இதேவேளை இந்த படகு விபத்தில் 150ற்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளது குறித்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் செயலாளர் நாயகம்  அகதிகள் குடியேற்றவாசிகளிற்கான பாதுகாப்பான பாதைகள் அவசியம் என தெரிவித்துள்ளார்.

சிறந்த வாழ்க்கையை தேடு;ம் ஒவ்வொரு குடியேற்றவாசிக்கும் பாதுகாப்பும் கௌரவமும் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை 300 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த இரு படகுகள் நீரில் மூழ்கின என  லிபியாவின் கடலோர பாதுகாப்பு படையின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17