அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரஸ்டன் தோட்ட 4ம் இலக்க தேயிலை மலையில் நான்கு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பம் இன்று பகல் இடம் பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த சிறுத்தை நுவரெலியாவில் உள்ள வனஜிவராசி திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)