200 ரயில் குறுக்கு பாதையில் மின் ஓசை, வர்ண சமிஞ்ஞை பொருத்த நடவடிக்கை

Published By: Vishnu

26 Jul, 2019 | 09:49 PM
image

200 ரயில் குறுக்கு பாதைகளில் மின் ஓசை எழுப்புதல் மற்றும் வர்ண சமிஞ்சைகள் பொருத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அங்கேரிய நாட்டின் கடன் நிதி உதவியின் கீழ் எதிர்வரும் 2 வருட காலப்பகுதிக்குள் மின் ஓசை மற்றும் வர்ண சமிஞ்ஞைகளுடன் 200 ரயில் குறுக்கு பாதைகள் முழுமையாக உள்வாங்குவதற்கு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபையில் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். ரயில் குறுக்க பாதை மற்றும் அதன் பாதுகாப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இந்த கேள்வியை முன்வைத்திருந்தார்.

நாடு முழுவதிலும் 1337 ரயில் குறுக்கு பாதைகள் இருப்பதாக தெரிவித்த அமைச்சர் இவற்றுள் 185 ரயில் குறுக்கு பாதைகள் தனியார் துறையினால் கையாளப்படுகின்றது. இதற்கு அமைவாக ரயில் திணைக்களத்தினால் பாதுகாப்பு வழங்கக்கூடிய ரயில் குறுக்கு பாதைகளின் எண்ணிக்கை 1152. இவற்றுள் 608 குறுக்கு பாதைகளுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வீதி தடைகளுடனான 181 குறுக்கு பாதைகளும் மின் ஓசை மற்றும் வரண சமிக்ஞை கட்டமைப்புடனாக 327 கட்டமைப்புகளும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு அற்ற ரயில் குறுக்கு பாதைகளுக்காக பாதுகாப்பு உறுப்பினர்களை ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு பொலிஸாரின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01