பாக்கிஸ்தானில் காணாமல்போகும் இந்து யுவதிகள் இஸ்லாமியர்களாக திரும்புகின்றனர்- சர்வதேச ஊடகம்

Published By: Rajeeban

26 Jul, 2019 | 03:50 PM
image

பாக்கிஸ்தானில் இந்துமதத்தை சேர்ந்த இளம்பெண்கள் காணாமல்போவதும் பின்னர் அவர்கள் முஸ்லீம்களாக திரும்புவதும் அதிகரித்துள்ளதாக ஏபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.

ரீனா ரவீனா என்ற இரு இந்து சகோதரிகளின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து ஏபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

தங்கள் இரு புதல்விகளும் கடத்தப்பட்டனர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை மணமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

தனது இரு பிள்ளைகள் இருக்குமிடங்களை கண்டுபிடித்த பின்னர் தான் உள்ளுர்  பொலிஸ்நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ததாக ரீனா ரவீனா சகோதரிகளின் தந்தை தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ள இருவருக்கே தங்கள் புதல்விகளை திருமணம் செய்து வைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றவேளை சகோதரிகள் கடத்தப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் அவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்துள்ள கணவமன்மார்களுடன் அவர்களை சேர்த்துவைக்கும்படி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலர் நீதிமன்றத்திற்கு வெளியே இதனை கொண்டாடினர்.

ரீனா ரவீனாவின் தாய் மௌனமாக அழுதபடி நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.

இதேவேளை சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக சிறுமிகள் கடந்த வருடம் பலவந்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர் என பாக்கிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவிக்கின்றது.

தனது வருடாந்த அறிக்கையில் பாக்கிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையகம் இதனை தெரிவித்துள்ளது.

இவ்வாறான நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெறுகின்றது என தெரிவிக்கும் பாக்கிஸ்தானின் மனித உரிமை அமைப்புகள் வறியகுடும்பங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த  இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர்  எனவும் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07